திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!

  • தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழிற்துறையின் சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து இந்த 2 நகரங்களிலும் அடுத்தடுத்து புதிய ஐடி பூங்காக்கள் திறக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்பொழுது சர்வதேசத் தரம் வாய்ந்த சொகுசு நட்சத்திர ஹோட்டல்களும் (Star Hotels) கோவையிலும் திருச்சியிலும் வர துவங்கியுள்ளன.

    Advertisement

    வணிக ரீதியில் இது மாபெரும் நகர்வாக பார்க்கப்படுகிறது, தமிழ்நாட்டின் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் (Commercial Real Estate) துறையில் இது முக்கிய திருப்பு முனையாகவும் அமைகிறது. ஐடி பார்க், மால், வணிக வளாகங்கள் வரிசையில் தற்போது ஆடம்பர ஹோட்டல்கள் வர துவங்கியுள்ளது ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறைக்கு பலமாக அமைந்துள்ளது.

    Advertisement

    திருச்சியில் 3 சர்வதேச மெகா ஹோட்டல்கள்

    திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து மற்றும் தொழில்துறை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகளவில் புகழ்பெற்ற மூன்று பன்னாட்டு பிராண்டட் ஹோட்டல் குழுமங்கள் (International Branded Hotel Chains) தங்களின் பிரம்மாண்டமான ஹோட்டல்களைத் திருச்சியில் தற்பொழுது வேகமாகக் கட்டி வருகின்றன.

    முதலாவதாக, இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஐஹெச்சிஎல் குரூப் (IHCL Group - Taj Hotels), திருச்சி டிவி கோவில் பைபாஸ் (TV Koil Bye Pass) பகுதிக்கு அருகே தனது புதிய சொகுசு ஹோட்டலை அமைத்து வருகிறது.

    Advertisement

    இந்த ஹோட்டல் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 11 அடுக்கு மாடிகளைக் கொண்டு (B+G+11 Floors), அதன் மொட்டை மாடியில் ஒரு பிரம்மாண்ட நீச்சல் குளத்துடன் (Rooftop Swimming Pool) மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இரண்டாவதாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்' (Four Points by Sheraton) ஹோட்டல் குழுமம், திருச்சி ரயில் நிலைய சந்திப்பிற்கு (TPJ Junction) நேர் எதிரே தனது மெகா ஹோட்டல் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.

    இந்த ஹோட்டல் அடித்தளம், தரைத்தளம், மெஸ்ஸானைன் தளம் மற்றும் 8 அடுக்கு மாடிகளுடன் (B+G+M+8 Floors) மொட்டை மாடி நீச்சல் குள வசதியுடன் அமையவுள்ளது.

    Advertisement

    மூன்றாவதாக, இந்தியாவின் மற்றுமொரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான ஐடிசி-யின் 'ஐடிசி ஃபார்ச்சூன்' (ITC Fortune) ஹோட்டல் குழுமம், திருச்சியின் முக்கியப் பகுதியான டிவிஎஸ் டோல்கேட் (TVS Tolgate) சந்திப்பில் தனது புதிய ஹோட்டலை நிறுவி வருகிறது. இது இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 அடுக்கு மாடிகளுடன் (2B+G+7 Floors) கூரை மேல் நீச்சல் குள வசதியைக் கொண்டிருக்கவுள்ளது.

    கோயம்புத்தூருக்கு சவால் விடும் திருச்சி

    தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை பகுதியான கோயம்புத்தூரை, மத்திய மண்டலத்தின் நுழைவாயிலான திருச்சி மாநகரம் சொகுசு ஹோட்டல் அறைகளின் (Branded Keys) எண்ணிக்கையில் முந்திவிடுமா என்ற புதிய விவாதம் தற்பொழுது கார்ப்பரேட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதுவும் வளர்ச்சியின் ஒரு அளவு கோலாகவும் விளங்குகிறது.

    Advertisement

    திருச்சியில் ஒரே நேரத்தில் இத்தனை முன்னணி பிராண்டட் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுமானத்தில் இருப்பது திருச்சி மாநகரம் அடைந்து வரும் பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சியைப் காட்டுகிறது.

    சென்னைக்கு அடுத்தபடியாகப் பன்னாட்டுத் தொழிலதிபர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கார்ப்பரேட் வல்லுநர்களை ஈர்ப்பதில் திருச்சியும் கோவையும் முன்னணியில் உள்ளது.

    வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும்

    ஐடி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்த நட்சத்திர ஹோட்டல்களின் வரவானது திருச்சியின் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் மதிப்பை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.

    சொகுசு ஹோட்டல்கள் அமையவுள்ள டிவி கோவில் பைபாஸ், ரயில்வே ஜங்ஷன் மற்றும் டிவிஎஸ் டோல்கேட் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள நிலங்களின் விலைகள் தற்பொழுது பன்மடங்கு எகிறத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    மிக முக்கியமாக, இந்த சர்வதேச ஹோட்டல்களின் வருகையால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களும் பல வகையில் வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது.

    English Summary

    Tiruchirappalli (Trichy) is witnessing a major hospitality surge with three leading international hotel brands — Taj, Four Points by Sheraton, and ITC Fortune — setting up luxury properties simultaneously. This development, along with IT growth, is positioning Trichy as Tamil Nadu’s next big commercial and economic hub after Coimbatore. திருச்சியில் தாஜ், ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் மற்றும் ஐடிசி ஃபார்ச்சூன் ஆகிய மூன்று சர்வதேச ஹோட்டல் பிராண்டுகள் ஒரே நேரத்தில் பிரம்மாண்ட ஹோட்டல்களை கட்டி வருகின்றன.