ஆட்சிக்கு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவீங்களா? வரலாறை படிங்க! விஜய்க்கு திருச்சி சிவா அட்வைஸ்

  • திருச்சி: எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை, எங்களிடம் இருப்பது உண்மையான உருவம் உண்மையான வரலாறு என்று மிசா விவகாரத்தில் த.வெ.கவினர் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    திருச்சி விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சரும் அவருடைய சகாக்களும் மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என பேசுகிறார்கள்.

    Advertisement

    ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டால் பிம்பம் உடைந்து விட்டதால் வீடியோ வெளியிடுவதாக விமர்சனம் செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை எங்களுக்கு இருப்பது உண்மையான உருவம் உண்மையான வரலாறு.

    எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சியையே இழந்தது. அப்போது இன்றைய முதல்வருக்கு வயது ஒன்று. சுதந்திரப் போராட்டத்தை நாம் பார்த்தது கிடையாது ஆனால் அதில் பங்கேற்ற வீரர்கள் குறித்து நாம் தொடர்ந்து பேசுகிறோம்.

    அதேபோல தான் எமர்ஜென்சி காலகட்டம் ஜனநாயகத்தை காக்கும் போராட்டமாக இருந்தது. எமர்ஜென்சி குறித்து பதட்டப்பட்டு நாங்கள் பேசவில்லை. த.வெ.கவினர் பாணியிலும் நாங்கள் பேச விரும்பவில்லை அது எங்களுக்கு பழக்கமும் கிடையாது.

    Advertisement

    ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்து விட்டோம் என்கிற ஒரே காரணத்திற்காக வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களை கொச்சைப்படுத்துவது நாகரீகம் ஆகாது. எமர்ஜென்சி குறித்து மீண்டும் மக்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை த.வெ.க எங்களுக்கு தந்ததற்கு அவர்களுக்கு நன்றி தான் கூற முடியும்.

    எமர்ஜென்சி காலகட்டத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டது என்பது குறித்து இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

    கொள்கைக்காக எமர்ஜென்சி எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக. பதவிக்காக அதிகாரத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற அரசியல் உலகில் கொள்கைக்காக ஜனநாயகத்தைக் காக்க பெரும்பான்மை பலத்தோடு இருந்த தங்களது ஆட்சியை இழந்தது திமுக.

    Advertisement

    எங்களை விமர்சிப்பவர்கள் அந்த வரலாற்று பக்கங்களை முதலில் படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது விஜய் ஒரு மணி நேரமாக ஆவேசமாக பேசியிருந்தார்.

    மிசா குறித்து பேசும் போது சிறையில் ஸ்டாலினை போலீஸ் அடித்ததில் தாடை உடைந்தது குறித்து செய்கை காட்டினார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தான் யாரையும் கிண்டல் செய்யும் நோக்கி திட்டமிட்டு அந்த உடல்மொழியை செய்யவில்லை என விஜய் விளக்கம் அளித்திருந்தார்.

    English Summary

    DMK MP Trichy Siva condemns CM Vijay on his body language over Stalin's misa arrest. He asked him to read the history.