குத்துவிளக்கேற்றுவதில் சண்டை! காங்கிரஸ் எம்பியிடம் இருந்த கேன்டிலை தட்டிவிட்ட TVK நவல்பட்டு விஜி

  • திருச்சி: திருச்சியில் தவெக அரசு சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கேற்றிய போது, திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி அவரிடம் இருந்த மெழுகுவர்த்தியை தட்டிவிட்டதால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

    Advertisement

    திருச்சியில் தவெக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக், திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    அப்போது இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடந்தது. முதலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கேற்றினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஏற்றினர்.

    கிறிஸ்டோபர் திலக்

    பிறகு கடைசியாக இருந்த திரியை ஏற்ற மாநிலங்களவை எம்பி கிறிஸ்டோபர் திலக் வந்தார். அவர் மெழுகுவர்த்தியை வாங்கியதும் , பதறியடித்துக் கொண்டே வந்த நவல்பட்டு விஜி, கிறிஸ்டோபரிடம் மெழுகுவர்த்தியை கேட்டார். அதற்கு அவர், "நான் ஏற்றிவிட்டு தருகிறேன்" என்றார்.

    பிடிவாதம் பிடித்த நவல்பட்டு விஜி

    ஆனால் நவல்பட்டு விஜி, "நான்தான் ஏற்றுவேன்" என்றார். அப்போது ரமேஷ் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். உடனே திலக், "சரி நீங்களே ஏற்றுங்கள்" என நவல்பட்டு விஜியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்த போது, அதை அவர் தட்டிவிட்டார். அதற்கு ரமேஷ் , "என்னங்க இப்படி பண்றீங்க" என நவல்பட்டு விஜியிடம் சைகையில் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    குத்துவிளக்கேற்றுவதில் சண்டை

    அப்போது நவல்பட்டு விஜியும் , அமைச்சர் ரமேஷிடம் வாக்குவாதம் செய்தார். உடனே கீழே விழுந்த மெழுகுவர்த்தியை கொடுத்து, "நான் சொல்றதை கேளுங்க, விளக்கேற்றுங்கள்" என ரமேஷ் சொன்னதும் விஜி விளக்கேற்றினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது. உடனே திலக் ஒதுங்கிக் கொண்டார். நவல்பட்டு விஜியும் திலக்கை முறைத்தபடியே சென்றார்.

    ரமேஷ் சமாதானம்

    இதுகுறித்து பின்னர் அமைச்சர் ரமேஷ் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது ரமேஷ், தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் எந்த மோதலும் இல்லை. நாங்கள் எல்லாரும் தாராபுரத்தில் ஒன்றாகவே ஓட்டு கேட்டோம்.

    Advertisement

    குத்துவிளக்கேற்றிய போது புரோட்டோகால்படி ஏற்ற வேண்டும் என நவல்பட்டு விஜி கூறியிருந்தார். மற்றபடி கூட்டணிக்குள் எந்த குழப்பமும் சலசலப்பு இல்லை என ரமேஷ் தெரிவித்தார்.

    108 இடங்களில் வென்ற தவெக

    108 இடங்களில் வென்ற தவெகவின் பலம் , திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் 107ஆக குறைந்தது. இதையடுத்து சபாநாயகர் ஒரு சீட்டை குறைத்தால் தற்போது தவெகவின் பலம் 106தான். எல்லா தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு 234 தொகுதிகளிலும் எம்எல்ஏக்கள் செயல்பட்டால் பெரும்பான்மைக்கு 118 தேவைப்படுகிறது. 120 முதல் 125 இருந்தால் கூட்டணி கட்சிகள் எப்போது ஆதரவை வாபஸ் வாங்குவார்கள் என்ற அச்சமின்றி இருக்கலாம் என்பதால் முதல்வர் விஜய் இடைத்தேர்தலுக்காக மெனக்கெட்டு வருகிறார்.

    Advertisement

    எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகள்

    இந்த நிலையில் தவெகவின் அரசின் செயல்பாடுகளை எதிர்த்து கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வேட்பாளருக்காக உழைக்கும் விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல் நிர்வாகிகளை விஜய் மேடையேற்றவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படும் நிலையில் திருச்சியில் நடந்த இந்த சம்பவம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேயர் பிரியா- பல்லவி மோதல்

    ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போது, அரசு பள்ளி கட்டடத்தில் ஒரு கட்டடத்தின் திறப்பு விழாவின் போது இதே போல் குத்துவிளக்கேற்றுவதில் மேயர் பிரியாவுக்கும் தவெக எம்எல்ஏ பல்லவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரியா, பல்லவி கேட்ட போது மெழுகுவர்த்தியை அவரிடம் கொடுக்காமல் ஆட்சியரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பல்லவி கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

    Advertisement

    இது புரோட்டோகால்படி என்று பிரியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மேயர் பிரியா புரோட்டோகால் என சொன்னதற்கு தவெகவினர் கடுமையாக விமர்சித்து ஜாதி ரீதியாக இந்த விஷயத்தை கொண்டு சென்றனர். ஆனால் இன்று திருச்சியில் தங்களுக்கென வரும்போது புரோட்டோகால் என்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    English Summary

    TVK MLA Navalpattu Viji knocks the candle from Congress MP Christopher Thilak when the latter tries to light the lamp. This incident was happened in Trichy.