அதிமுக காலி! தவெகவில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 4 முன்னாள் எம்எல்ஏ-க்கள்.. யார் தெரியுமா?

  • திருச்சி: சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோரும் நாளை தவெகவில் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் எம்எல்ஏ-க்களான தமிழ்ச்செல்வன், ராம் குமார், திருஞானசம்பந்தன், ராஜவர்மன் ஆகியோரும் தவெகவில் இணைய இருக்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததில் இருந்தே அதிமுகவில் இருந்து ஏராளமானோர் விலகி தவெகவில் இணைவது அதிகரித்து வருகிறது. சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது அதே ஸ்டைலில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தவெகவில் இணைய உள்ளனர்.

    Advertisement

    நாளை காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் இந்த இணைப்பு விழா நடக்கவுள்ளது. இதனிடையே அதிமுகவில் இருந்து யார் யார் தவெகவில் இணைகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

    5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து தவெக பக்கம் செல்வதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்த் மற்றும் வளர்மதி ஆகியோர் நாளை தவெகவில் இணைவது உறுதியாகி இருக்கிறது. இந்த 4 முன்னாள் அமைச்சர்களும் தவெகவில் இணைந்தபின் விஜய்யையும் சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    அதேபோல் முன்னாள் எம்எல்ஏ-க்களான தமிழ்ச்செல்வன், ராம் குமார், திருஞானசம்பந்தன், திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜவர்மன் ஆகியோரும் தவெகவில் இணைகின்றனர். அதுமட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் 59 பொதுக்குழு உறுப்பினர்களும், கரூர் மாவட்டத்தில் இருந்து 49 பொதுக்குழு உறுப்பினர்களும் தவெகவில் ஐக்கியமாகின்றனர்.

    மொத்தமாக இரு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 15 ஆயிரம் பேர் தவெகவில் இணைகிறார்கள். இதனால் தவெக தலைமை உற்சாகம் அடைந்துள்ளது. இன்று மாலை தவெக அதிகாரப்பூர்வமாக கூட்டணியை உறுதி செய்யும் சூழலில், நாளை கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. இதனால் நாளுக்கு நாள் தவெகவின் பலம் அதிகரித்து கொண்டே செல்வதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK: Who are the Former AIADMK Ministers joining Ruling TVK tomorrow apart from C Vijayabhaskar and MR Vijayabaskar