திடீரென யு டேர்ன் அடித்த போலீஸ் வாகனம்.. செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின்!

  • திருச்சி: சென்னை நீலாங்கரையில் இன்று காலை கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த போலீசார், தங்கள் வாகனத்தில் தஞ்சை நோக்கி புறப்பட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக உதயநிதி ஸ்டாலின் வேனில் அழைத்து செல்லப்பட்ட நிலையில் தஞ்சையை நெருங்கிய நிலையில் அவரது வாகனம் திடீரென திரும்பி திருச்சி நோக்கி செல்கிறது. செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில், மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

    Advertisement

    இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதியை இன்று காலை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் திட்டம் இல்லை என்று நீதிமன்றத்தில் போலீசார் கூறிய நிலையில், அவரை விசாரணைக்கு பிறகு இன்றே விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையில் இன்று காலை கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்து வரப்படுகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட உள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்பாக நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். திமுகவினர் தொடர்ந்து குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. போலீசார் பேரி கார்டுகளை அமைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் எஸ்பி வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    Advertisement

    தஞ்சையில் திமுகவினர் குவிந்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினிடம் திருச்சியில் விசாரணை நடத்தப்பட உள்ளதா? என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தஞ்சை நோக்கி சென்ற வாகனம் திடீரென திருச்சி நோக்கி சென்றுள்ளது. அதாவது அரை மணி நேரத்தில் தஞ்சை தெற்கு காவல் நிலையம் சென்றடைய இருந்தது. ஆனால் அங்கு திமுகவினர் அதிகளவில் திரண்டு இருந்ததால் திருச்சிக்கு அந்த வாகனம் திரும்பியுள்ளது.

    திருச்சி அருகே உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

    தஞ்சை தெற்கு காவல் நிலையம் முன்பாக திமுகவினர் அதிக அளவில் திரண்டு உள்ளனர். தொடர்ந்து திமுகவினர் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், தஞ்சை அழைத்து செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநித் ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

    English Summary

    Police have set out for Thanjavur in their vehicle to interrogate Opposition Leader Udhayanidhi Stalin, who was arrested this morning in Neelankarai, Chennai. After being transported in a van for over seven hours—and just as they were nearing Thanjavur—the vehicle suddenly changed direction and headed towards Trichy. It is reported that he has been taken to the Sengipatti police station.