திருச்சி: உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. இதையடுத்து தனது காரில் உதயநிதி சென்னை புறப்பட்டுள்ளார். உதயநிதி விடுவிக்கப்பட்டதும் அங்கு திரண்டு இருந்த திமுகவினர் உற்சாகத்தில் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உதயநிதியும் திறந்தவெளி காரில் நின்று தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சுமார் 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சாலை மார்க்கமாக வேனில் அழைத்து செல்லப்பட்ட உதயநிதி மாலை 6.50 மணியளவில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் அங்கு குவிந்து இருந்த திமுகவினர் விசில் அடித்து உற்சாகத்துடன் உதயநிதியை வரவேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி காரில் வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். கொட்டும் மழையிலும் உதயநிதி வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துவிட்டு மீண்டும் காரில் சென்னை புறப்பட்டுள்ளார். தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி உதயநிதிக்கு எதிராக தவெக மகளிர் அணி தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், தஞ்சை போலீசார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்தனர். இதற்கு திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் உதயநிதியை விசாரணைக்கு பிறகு இன்றே விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து உதயநிதி சென்னையில் இருந்து தஞ்சைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். 7.45 மணி நேரம் வேனில் உதயநிதியை அழைத்து சென்ற போலீசார், தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. செங்கிப்பட்டி காவல் நிலையத்தில், எஸ்பி சுந்தரவதனம் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 1 மணி நேரத்திற்கும் மேலாக உதயநிதியிடம் விசாரணையானது நடைபெற்றது. செங்கிப்பட்டி காவல் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையில் உதயநிதி விடுவிக்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி திமுகவினர் அங்கேயே காத்திருந்தனர். திமுகவினர் சிலர் பேரிகார்டுகளை நகர்த்திவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திமுகவினர் தொடர்ந்து அங்கு குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து விசாரணை நிறைவு பெற்றதும் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். உதயநிதி காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை பார்த்து உற்சாகத்தில் தொண்டர்கள் விசில் அடித்தும் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பியும் வரவேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி காரில் வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். கொட்டும் மழையிலும் உதயநிதி வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துவிட்டு மீண்டும் காரில் சென்னை புறப்பட்டுள்ளார். செங்கிப்பட்டியில் வைத்து உதயநிதியிடம் மாலை 6.50 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்றது. போலீஸ் நிலைய ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்பட்ட நிலையில் தனது காரில் உடனடியாக சென்னை புறப்பட்டார்.சர்ச்சை பேச்சு
1 மணி நேரம் விசாரணை
விசில் அடித்து வரவேற்ற தொண்டர்கள்