மண்டல பொறுப்பு ரெடி.. விஜயபாஸ்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.. தவெக தலைமை கொடுத்த உத்தரவாதம்!

  • திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு மண்டல அளவிலான பொறுப்பை கொடுக்க தவெக தலைமை உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுக்க முடியும் என்ற உற்சாகத்தில் இருக்கும் விஜயபாஸ்கர், ஆதரவாளர்களுக்கும் பதவி கொடுப்பதாக உறுதி கொடுத்து வருகிறார்.

    Advertisement

    அதிமுக சார்பாக விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.விஜயபாஸ்கர், கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினார். அவர் மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்று புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட அதிமுகவின் அடிமட்ட கட்டமைப்பையே தவெக பக்கம் நகர்த்தி வந்துவிட்டார்.

    Advertisement

    விஜயபாஸ்கரின் இந்த செயல்பாட்டால் தவெக தலைமை உற்சாகம் அடைந்தது. அதேபோல் விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கட்சிப் பதவியும் அளிக்கப்படும் என்றும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பை விஜயபாஸ்கர் எதிர்பார்த்திருந்தார்.

    ஆனால் அமைச்சர் பர்வேஸ் மற்றும் விஜயபாஸ்கர் இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் உண்டு செய்துவிடக் கூடாது என்பதால் தவெக தலைமை காலம் தாழ்த்தியது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட அரசியலை விட்டுக் கொடுக்க அமைச்சர் பர்வேஸ் விரும்பவில்லை. இதனால் தவெக தலைமையை விஜயபாஸ்கர் நாடி இருக்கிறார்.

    Advertisement

    அப்போது செங்கோட்டையனுக்கு எப்படி 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டதோ, அதேபோல் உங்களுக்கு மண்டல அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என்று தவெக தலைமை உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இதனை எதிர்பார்க்காத விஜயபாஸ்கர், டெல்டா மாவட்டங்களின் கட்டுப்பாட்டை எடுத்துவிடலாம் என்று உற்சாகம் அடைந்திருக்கிறார்.

    இதன் காரணமாகவே புதுக்கோட்டையில் ஒன்றிய அளவிலான தவெகவினருக்கு ஒவ்வொரு வாரமும் தடபுடலாக அசைவ விருந்து கொடுத்து வருகிறார். அதேபோல் தன்னை நம்பி தவெக வந்த ஆதரவாளர்களுக்கும் நிச்சயமாக பதவியை பெற்றுக் கொடுப்பேன் என்று நம்பிக்கையாக கூறத் தொடங்கி இருக்கிறார். இதனால் விராலிமலை இடைத்தேர்தல் பணிகளில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் ஜரூராக இருக்கின்றனர்.

    English Summary

    Vijayabaskar: AIADMK former Minister Vijayabaskar Set for Key Zonal Post in TVK to Strengthen Delta Region Hold