திருச்சியில் இஸ்திரி கடைக்காரர் பார்த்த வேலை.. ஆடிப்போன அரசு ஊழியர்

  • திருச்சி: திருச்சியில் மின்சார டெபாசிட் தொகை செலுத்தாமல் இருக்க லஞ்சம் பெற்றதாக மின்வாரிய அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது. லஞ்சப் பணத்தை வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவால் பரபரப்பு‌‌ ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் இஸ்திரி கடை நடத்தி வருகிறார்.

    Advertisement

    இவருடைய கடைக்கு இந்த மாத மின் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் தொகையும் சேர்ந்து உயர்ந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவரம் அறிய வண்ணாங்கோவில் மின் வாரிய ஆர்.எஸ். பிரிவு அதிகாரி பழனிச்சாமியிடம், தனது மின்கட்டணம் ரூ. 7,000 மட்டுமே வந்துள்ளதாக இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அதற்கு அதிகாரி பழனிச்சாமி, டெபாசிட் தொகையான ரூ. 21,000 இதோடு சேர்த்து கட்ட வேண்டும் என்றும், அப்போது தான் உங்களால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், மின் கட்டணத்தை மட்டும் தனியாகச் செலுத்துவதற்கு வழிவகை செய்ய ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, முகமது இப்ராஹிம் அந்த அதிகாரியிடம் பேசி ரூ. 6,800 லஞ்சமாக தொடுத்துள்ளார். இதை மறைமுகமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது .

    Advertisement

    அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் தற்போது ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மின்வாரிய அதிகாரி லஞ்சம் பெறும் இந்த வீடியோ திருச்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுவாக லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் அவர்கள் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.

    அதனை அரசு அதிகாரிகள் கையில் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள். அப்படி கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவர் சஸ்பென்ட் செய்யப்படுவார். அந்த நாள் முதலே அந்த அதிகாரியின் சம்பளம் பாதியாக குறைந்து விடும். அத்துடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.‌ ஒரு வேளை சஸ்பென்ட் முடிந்து வேலைக்கு திரும்பினாலும் சட்ட நடவடிக்கை தொடரும்.

    English Summary

    In Trichy, an allegation has surfaced against an Electricity Board (EB) official for accepting a bribe to waive an electricity deposit fee. A video of the official taking the bribe money has gone viral on social media, causing a stir in the area.