திருச்சி பெண் அரசு ஊழியரை மிரட்டிய பாஜக நிர்வாகி.. கைது செய்ய தயங்குவது ஏன்? அரசு ஊழியர்கள் கேள்வி

  • திருச்சி: பெண் அரசு ஊழியரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் காவல் துறை தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அரசு ஊழியர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின்னரே எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்டுள்ள நான்கு பிரிவுகளும் பிணையில் வர முடியாத குற்றங்களாகும். ஆனாலும் இன்று வரை அவரைக் கைது செய்யாதது ஏன்? இதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத்தான் உத்தரவு வந்துள்ளது; கைது செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை" என்று அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

    Advertisement

    திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலகப் பெண் ஊழியரைப் பாஜக மாநில இளைஞரணி நிர்வாகியும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஒப்பந்ததாரருமான கெளதம் என்பவர் அநாகரிகமான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பெண் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மட்டுமின்றி, பெண் என்றும் பாராமல் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்குப் பாதுகாப்பான அரசு என்று சொல்லிக்கொள்ளும் தமிழக வெற்றிக் கழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றைய தினம் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இச்சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், "அவரைக் கைது செய்ய வேண்டுமா? அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமா?" என்று கேள்வி கேட்டு ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர். தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பிய வருவாய்த்துறை அதிகாரிகள், உடனடியாக அவரைக் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த ஒரு நாள் அடையாளக் காத்திருப்புப் போராட்டம் தொடர் காத்திருப்புப் போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்தனர்.

    Advertisement

    தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த திங்கள்கிழமை திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு மனு தொடர்பான விசாரணைக்கு பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் கெளதம் வந்தார். அது அவருடைய மனு கிடையாது; வேறு ஒருவரின் மனுப் பரிந்துரைக்காக வந்தார்.

    ஆந்திரா ₹16–₹20, தமிழ்நாடு ₹37/யூனிட்.. மின்வாரியம் செய்ய தவறிய ஒரு விஷயம்.. விலை அதிகமானது ஏன்?

    அப்போது 'ஜோனல் டி.டி (Zonal DT) எங்கே போய்விட்டான்? ரிப்போர்ட் கொடுக்காமல் அவன் எங்கே போனான்?' என நாகரிகமற்ற முறையில் பேசியிருக்கிறார். அத்துடன் மனுவிலுள்ள பெயரை மாற்றித் தருமாறு பாஜக நிர்வாகி கேட்டிருக்கிறார். அதற்குச் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, 'நீங்கள் சொல்லும் மனு கிடைக்கப்பெறவில்லை; நீங்கள் வட்டாட்சியரைப் பார்த்து முறையிடுங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்போது பாஜக நிர்வாகி கெளதம், அந்தப் பெண் அரசு ஊழியரைப் பார்த்து மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளார் (நாகரிகம் கருதி அதை இங்கு கூறவில்லை).

    Advertisement

    'மாலை 6 மணிக்கு மேல் கீழேதானே வருவாய்? நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று மிரட்டியிருக்கிறார். அத்துடன் 'அந்தப் பெண் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் தெரியுமா?' என்றும் ஏளனமாகப் பேசியிருக்கிறார். இந்த மிரட்டல் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கூறியபோது புகார் அளிக்குமாறு கூறினார்கள். நாங்கள் 5-ஆம் தேதியே புகார் அளித்தோம். அங்கிருந்த உதவி ஆணையர் (AC), 'எஃப்.ஐ.ஆர் போட வேண்டுமா? எஃப்.ஐ.ஆர் போட்ட பின்னர் கைது செய்ய வேண்டுமா சார்?' என்று கேட்டாரே தவிர, அவரிடமிருந்து எந்தச் சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

    Advertisement
    பரிதவித்து நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள்.. சென்னை அண்ணா சதுக்கத்தில் மனதை பாதித்த 2 விஷயங்கள்

    அதனால் 7-ஆம் தேதி திருச்சி காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம். அவர் வாட்ஸ்அப்பில் (WhatsApp) புகாரை அனுப்புமாறு கூறினார்; அதன்படியே நாங்கள் அனுப்பினோம். திருச்சி ஆணையரிடம் புகார் அளித்த பின்னரே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதில் நான்கு பிரிவுகள் பிணையில் வர முடியாத குற்றங்களாகும். ஆனாலும் இன்று வரை அவரைக் கைது செய்யாதது ஏன்? இதுபற்றிக் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எஃப்.ஐ.ஆர் போடத்தான் உத்தரவு வந்துள்ளது; கைது செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை' என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்

    English Summary

    Why are the police hesitating to arrest the BJP functionary who threatened a female government employee in Trichy? Government employees raise the question.