திருச்சி சமயபுரம் லாட்ஜில் பணக்கார இளைஞர்களை மயக்கிய இளம் பெண்கள்.. இறுதியில் ட்விஸ்ட்

  • திருச்சி: திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம் ஆகும். அப்படி விடுதிகளில் தங்கி இருந்த வாலிபர்களை மயக்கி தங்க நகைகளை திருடிச்சென்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    Advertisement

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம் ஆகும் இந்நிலையில், கோவிலுக்கு வரும் பணக்கார இளைஞர்களை சில பெண்கள் ஏமாற்றி விபச்சாரம் செய்வதாக கூறப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள், இளைஞர்களை விபச்சாரத்திற்கு அழைப்பதாக அவ்வப்போது போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

    Advertisement

    சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில வாலிபர்களை தொடர்பு கொண்ட பெண்கள், அவர்களை சமயபுரத்திற்கு வரவழைத்து அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் 'உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை கூறி, மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்களாம்.

    அதை குடித்த வாலிபர்கள் மயங்கிய நிலையில், அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு அந்த பெண்கள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்களை தேடி வந்தார்கள்.

    Advertisement

    இந்நிலையில் சமயபுரத்தை அடுத்த பணமங்கலம் பாலம் அருகே 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்றதைக் கண்ட சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 47), சந்திரா (39) மற்றும் சிவகாசியை சேர்ந்த சுந்தரிதேவி (30) என்பது தெரியவந்தது. அவர்கள் தான் திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரபலமான விடுதிகளில் தங்கி ஆண்களை மயக்கி நகைகளை திருடிச்சென்றதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 7 பவுன் தங்க நகைகளை மீட்டனர். அவர்கள் 3 பேர் மீதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில போலீஸ் நிலையங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள சில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

    English Summary

    The police arrested three women who young men staying in lodges in Samayapuram, Trichy, and stole their gold jewelry. They recovered seven sovereigns of gold jewelry from them.