ரொட்டி கூட கொடுக்காத சிஎம் விஜய்.. மாத்திரையை நுணுக்கிய சரத்! இதில் ஜெகதீஸ்வரி வேற.. விளாசிய மாஜி!

  • தூத்துக்குடி: குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் வேறுபாடு தெரியாத முதல்வரை தமிழகம் பெற்றிருக்கிறது எனவும், அமைச்சர் ஜெகதீஸ்வரி வரம்பு மீறி பேசுகிறார், உள்ளாடையோடு உட்கார வைத்து கொன்று விடுவேன் என நிர்வாகியிடம் பேசிய ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்ட அதிமுக, ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது..

    Advertisement

    இதனை தொடர்ந்து, ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," தமிழக பட்ஜெட்டில் பெயர் மாற்றம், இடமாற்றம் தவிர எதுவும் இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    ஆர்.பி. உதயகுமார்

    தவெக தேர்தல் வாக்குறுதியில் மகளிர்க்கு 2500, 6 சிலிண்டர்கள், மகளிர்களுக்கு தமிழகம் முழுவதும் கட்டணமில்லா பேருந்துகள், படித்த பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாய் போன்ற எந்த வாக்குறுதிகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மூன்று மாதத்தில் 22 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். 1லட்சத்து 22,000 கோடி இந்த நிதியாண்டில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை துறை செயலாளர் 50 ஆண்டுகளானாலும் கடன் சுமையை குறைக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

    Advertisement

    எடப்பாடி பழனிச்சாமி

    மூன்று மாதத்தில் 22 ஆயிரம் கோடி என்று சொன்னால் எப்படிப்பட்ட நிர்வாகம் என்பதை நாம் பார்க்க வேண்டும். கொரோனா காலத்தில் வரி வருவாய் இல்லாத நேரத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கினார். ஆனால் தமிழகத்திற்கு ரொட்டித் துண்டு கூட கொடுக்காதவர் தான் விஜய். தமிழ் மண்ணிற்காக, தமிழ் இனத்திற்காக, நாட்டிற்காக போராட்டக் களத்திற்கு செல்லாத விஜய் பட்டினி போராட்டம் என்றால் என்ன என்று அறியாத விஜய், எந்த தியாகமும் செய்யாமல் நாட்டில் முதலமைச்சராக வந்திருக்கிறார் என்றால் அவருக்கு நடிக்க தெரிகிறது.

    Advertisement

    பஞ்ச் டயலாக்

    எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் மனதை படிக்க தெரிகிறது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி நடிக்க தெரியவில்லை. வசீகர வசியம், பஞ்ச் டயலாக் கவர்ச்சி வசனம் தெரியாததால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. வெற்றியோ தோல்வியோ சகஜம்., எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரை அரியணையில் அமர்த்துவோம்.

    அடக்குமுறை

    ஜனநாயகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள ஜனநாயக தலைவர் தயாராக இருப்பார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் தயாராக இருப்பார்கள். பொதுவாக அவதூறு நிலைகளில் வழக்கு தொடுப்பார்கள். ஆனால் இரவோடு, இரவாக கைது செய்வது என்பது இப்போது குறுகிய நடைமுறையாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி அடக்குமுறையால் விமர்சனங்களை அடக்கி விடலாம் என்று விஜய்க்கு யாராவது ஆலோசனை கூறினால் தவறான ஆலோசனையாக அமையும்.

    Advertisement

    மாய கட்டமைப்பு

    விஜய் அரசு இன்ஸ்டா, ரீல்ஸ் போன்ற மாய கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை தாண்டி அனைத்து மாநிலங்களிலும் paid infulancer கட்டமைத்து வருகிறார்கள். விஜய்க்கு எந்த பதவி மீது மோகம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆபத்தை நோக்கி மட்டும் செல்கிறது. முதலமைச்சர் பேசுற வசனம் அமைச்சர் பேசுவதற்கு சம்பந்தமில்லை.

    அமைச்சர் ஜெகதீஸ்வரி

    ஒரு அமைச்சர் ஐபிஎல் மைதானத்தில் மாத்திரையை நுணுக்குவதாக கூறுகிறார். அமைச்சர் ஜெகதீஸ்வரி வரம்பு மீறி பேசுகிறார். உள்ளாடையோடு உட்கார வைத்து கொன்று விடுவேன் என்கிறார். அவர் பேசிய ஆதாரம் இருக்கிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ரில்ஸ்-ல் அமைச்சர்கள் இருப்பதால் ரியல் என்னவென்று தெரியவில்லை. முதலமைச்சருக்கு கள நிலவரம் தெரியவில்லை" என்றார்.

    English Summary

    Former minister R.B. Udhayakumar criticises CM Vijay's government over budget promises, arrests, debt and ministers' controversial remarks.