’கத்தி’ ரெண்டு பக்கமும் ஷார்ப்! எந்த பக்கம் வெட்டும்னு தெரியாது! பஞ்ச் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்!

  • தூத்துக்குடி: எந்த வகையிலாவது திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள் அது ஒரு காலத்திலும் நடக்காது. கத்தி இரு பக்கமும் கூர்மையானது எந்த பக்கம் வேண்டுமானாலும் வெட்டும் என்பதை விரைவில் அவர்கள் உணர்வார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வரை அவதூறாக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்டு நேற்று இரவு சொந்த ஜாமீனில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

    Advertisement

    இந்த நிலையில் இன்று காலை ஜமீன்தாரர்கள் மூலம் பிணைத் தொகையை கட்டுவதற்காக திருச்செந்தூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர் பிணைத்தொகையை கட்டினார். பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

    காவல்துறை

    அப்போது அவர் கூறுகையில்," நேற்று என்னை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கோர்ட்டிலே ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த ஜாமீன் வழங்கப்பட்டதன் அடிப்படையிலே வெளியே வந்திருக்கிறேன். 10 நாட்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் விதிக்கப்பட்டிருக்கிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் லண்டன் சென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    Advertisement

    திமுக

    லண்டனுக்கு செல்வதற்கு அவரை வழி அனுப்ப முடியவில்லை என்ற வருத்தம் தான் என்னிடத்தில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த வகையிலாவது நிறுத்தி விடலாம் என்ற வகையில் காவல்துறையை வைத்து விளையாடலாம் என்று நினைக்கிறார்கள். கத்தி என்பது இருபக்கமும் கூர்மையானது. எந்த பக்கமும் கத்தி வெட்டும் என்பதை அவர்கள் காலத்தால் அறிவார்கள்.

    நயினார் நாகேந்திரன்

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் பேசிய போது அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் அவர்கள் பாஜகவிற்கு பயந்து இருந்தார்கள். இப்போது திமுகவை மிரட்டி அழித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். அது ஒரு காலத்திலும் நடக்காது.

    Advertisement

    அனிதா ராதாகிருஷ்ணன்

    தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து தரம் தாழ்ந்த வகையில் பேசியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவதூறு பரப்புதல் மற்றும் வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஜாமீன்

    இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 5 மணி நேர விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் அழைத்துச் சென்றனர். அப்போது தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு போலீசார் வலியுறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கியதோடு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    DMK leader Anita Radhakrishnan accused the government of targeting his party after securing bail in the Vijay remarks case.