50 கோடி எவ்வளவு இருக்கும் ? ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ புகாருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

  • தூத்துக்குடி: நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள்.. முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கு என்று தெரியுமா? திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை.. கஞ்சா வியாபாரம் செய்யவில்லை .. என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணன் அண்மையில் திமுக குதிரை பேரம் நடத்தியதாக ஊடகங்களில பேசியதுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் "முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ரூ.50 கோடி வரை பேரம் பேசினார்கள்.லாரி ஏற்றிக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். எம்.எல்.ஏ குடியிருப்புக்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். நான் யாருக்கும் விலை போக மாட்டேன்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இது தொடர்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அன்னை வி.ஜி. சரவணன் அளித்த பேட்டியில், "தற்போது நிறைய நபர்கள் என்னிடம் நேரடியாக வந்து ரூ.30 கோடி தருகிறேன், ரூ.50 கோடி, ரூ.100 கோடி தருகிறேன், அதற்கு மேலும் தருகிறேன், நீங்கள் தி.மு.க.விற்கு வந்துவிடுங்கள். இல்லையென்றால் நாங்கள் உங்களை இவ்வாறு தொல்லை கொடுப்போம் என்கின்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் 100 பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்றால் 60 சதவீதம் பேர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்தான் உள்ளனர். இது தென்மாவட்ட அரசியல். நீங்கள் ஏழ்மையில் இருந்து வந்துள்ளீர்கள் என்கின்றனர்.

    Advertisement

    நான் அடிமட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ. ஆனதால்தான் இவ்வளவு தொல்லை கொடுக்கின்றனர். என்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. நெல்லையைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் 4 பேர் என்னிடம் பேரம் பேசியதற்கான ஆதாரம் உள்ளது. ஒன்று இங்கே வந்துவிடு... இல்லையேல் உன்னை அழித்துவிடுவோம் என்கின்றனர். என் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகின்றனர். முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவர் குதிரைபேரம் பற்றி பேசியுள்ளார். அப்படியென்றால் நீங்கள் செய்வது என்ன பேரம்? என்னுடைய எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வந்து மிரட்டுகிறார்கள்.

    நீ கீழே இருந்து வந்தவன். வண்டியில் போனால் லாரியை வைத்து அடித்து தூக்கிவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இப்படித் தான் கடந்த 25 நாட்களுக்கு முன்பு எட்டயபுரமென்றான் பகுதியில் காரில் சென்றபோது ஒரு லாரி வேண்டுமென்றே மோதுவதுபோல் வந்தது. அன்று நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்" இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் சரவணன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளதால் அதனை திசை திருப்புவதற்காகவே இப்படிப் பேசியதாக திமுகவினர் விமர்சிக்கிறார்கள்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசிய வழக்கில் மூன்றாம் நாளாக இன்று திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கையெழுத்திட வருகை தந்தார். அவருடன் திமுக கட்சியினர் வருகை தந்தனர். காவல் நிலையத்திற்குள் சென்று கையெழுத்திட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உயிருக்கு பாதிப்பு இல்லை என்று ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்காக வேட்பாளர் சரவணன் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

    மேலும் அவர் தன்னை லாரி ஏற்றி கொலை செய்த முயற்சித்ததாக கூறியதற்கு, 300 ரூபாய் அவர் யாரிடமும் கேட்டிருப்பார் அதை கொடுக்க மறுத்ததால் அது அந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

    Advertisement

    உங்களின் ஆதரவாளர் ஒருவர் அவரிடம் பேரம் பேசியதாக கேட்டதற்கு, ஒரு ஆடியோ வந்து கொண்டிருக்கிறது அவர் ஆதரவாளரா என்று கேட்டார்.
    அவரிடம் 50 கோடி ரூபாய் டிமாண்ட் செய்வதாக குறித்து கேட்டபோது, நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள் என்று கிண்டலாக பேசினார். முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கு என்று தெரியுமா.?

    அவர் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை.. கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. உங்களை அனுப்பிவிட்டு நான் மானபங்க படுத்தவில்லை. செய்தவர் எல்லாம் அவர் சொல்வது தவறான செயல். தொடர்ச்சியாக உங்கள் மீது குற்றச்சாட்டு அவர் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பழுத்த மரம் தான் கல்லடி படும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English Summary

    "If you want, go ahead and get me 50 crore rupees... Do you even realize how much 50 crore rupees is? The information provided by Srivaikuntam MLA Annai V.G. Saravanan is completely false. I am not involved in the lottery business, nor am I involved in the ganja trade," stated former Minister Anitha Radhakrishnan.