சீமான் குழந்தைக்கு சீர் செய்ய என்ன காரணம்? தாக்கூருக்கு அருகதை இல்லை! அனிதா ராதாகிருஷ்ணன் அட்டாக்!

  • தூத்துக்குடி: உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு மணி என்று காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகின்ற மாணிக்கம் தாக்கூருக்கு எந்த அருகதையும் இல்லை எனவும், நான் சீமான் குழந்தைக்கு சீர் வழங்கியது எனக்கும் அண்ணன் காளிமுத்து அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடர்ச்சி அன்றி வேறொன்றுமில்லை என திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் அரசியலற்ற முறையில் பிதற்றியுள்ளார்.

    Advertisement

    அரசியல் அறத்திற்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி எடுத்த ஆதரவு முடிவை பலதரப்பட்ட முறையில் விமர்சிக்கப்படுகிறது. திமுக கூட்டணி தர்மத்திற்கு மாறாக காங்கிரஸ் செயல்பட்டதை அரசியலாக விமர்சிக்கிறது.

    மாணிக்கம் தாகூர்

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு அரசியலாக பதில் சொல்ல முடியாத மாணிக்கம் தாகூர் தனிப்பட்ட முறையில் பிதற்றுவது நாகரீகமானதல்ல. நான் சீமான் குழந்தைக்கு சீர் வழங்கியது எனக்கும் அண்ணன் காளிமுத்து அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடர்ச்சி அன்றி வேறொன்றுமில்லை.

    மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தமிழர்களின் தன்மானத்திற்காகவும் விடாப்பிடியாக போராடும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் உறுதிமிக்க தொண்டராக நான் என் பணியை செய்து வருகிறேன்.

    Advertisement

    அனிதா ராதாகிருஷ்ணன்

    வெள்ளையரை எதிர்த்து வீரச்சமர் புரிந்து மரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தளபதி வெள்ளையத்தேவன், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார், மகாகவி பாரதியார், தப்பை தப்பென மத்திய மந்திரியை விமான நிலையத்தில் மடக்கி கேள்வி கேட்ட கே டி கோசல்ராம் ஆகியோர் பிறந்த மண்ணில் இன்று நாங்கள் தமிழ் மக்களுக்கான உறுதியான அரசியலை செய்து வருகிறோம்.

    உதயநிதி ஸ்டாலின்

    எங்கள் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு மாணிக்கம் தாக்கூர் (மணி) என்று காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகின்ற மாணிக்கம் தாக்கூருக்கு எந்த அருகதையும் இல்லை. அரசியலற்ற பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK MLA Anitha Radhakrishnan defends family ties with Seeman and launches a sharp attack on Congress MP Manickam Tagore.