தூத்துக்குடி: துணைப் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக ஸ்டாலினிடம் நேரடியாக பேச முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிரடி அரசியலுக்கு திரும்ப முடிவு செய்துள்ளதோடு, அம்பை தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பையும் கேட்டு பெற தீவிரமாக உள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பின் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தான் முதல் நபராக கைது செய்தது. தூத்துக்குடியில் தனித்து செல்வாக்குடன் இயங்கி வரும் அனிதா ராதாகிருஷ்ணன், அதன்பின் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் திடீரென திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கிய பின் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.
ஏனென்றால் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 70 வயது கடந்துவிட்டது. இதனால் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகுமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மூலமாக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கைப்பற்ற காய் நகர்த்தி வந்தார். ஆனால் கே.என்.நேருவால் எந்த பதிலையும் அளிக்க முடியவில்லை. இப்படியான சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி இருக்கிறார். இதனால் உற்சாகத்தில் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், அதிரடி அரசியலுக்கு தயாராகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவும் தீவிரமாக உள்ளார். ஏனென்றால் அனிதா ராதாகிருஷ்ணன் இடத்தில் யாருக்கு பதவி அளிக்கப்படும் என்ற கேள்வி திருச்செந்தூரில் வட்டம் அடிக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளருக்கு பதவி கிடைக்குமா? அல்லது கனிமொழி ஆதரவாளருக்கு பதவி கிடைக்குமா? என்ற பேச்சுகள் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளன. இதனால் ஸ்டாலினை சந்தித்து முறையிட அனிதா ராதாகிருஷ்ணன் முடிவு எடுத்துள்ளார். குறிப்பாக திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி தனது ஆதரவாளருக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் தெளிவாக கூறிட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதனுடன் சேர்த்து அம்பை தொகுதி தேர்தல் பொறுப்பை கைப்பற்றிவிடவும் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அம்பை தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பை தனக்கு கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அனிதா ராதாகிருஷ்ணன் பேசி இருந்தார். இடைத்தேர்தல் பொறுப்பை பெற்று திமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், நிச்சயமாக திமுகவில் உயர்ந்த பதவிக்கு சென்றுவிடலாம் என்பதும் அனிதா ராதாகிருஷ்ணனின் ஒரு மறைமுக கணக்கு என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.வருத்தத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்.. மீனவருக்கு பொறுப்பு? தூத்துக்குடியில் ஆட்டத்தை மாற்றும் திமுக!