தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவியுடன் காட்டுக்குள் காதலன்.. பின்னாடியே 2 பேர்.. சிக்கியது எப்படி

  • தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காதலன் பிளஸ்-2 மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். மொத்தம் 3 பேர் சென்றுள்ளனர். இதனிடையே காட்டு பகுதியில் 3 வாலிபர்களுடன் பிளஸ்-2 மாணவி தனியாக இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மடக்கினர். அப்போது காட்டு பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று உல்லாசமாக இருக்க முயன்றதும், மேலும் காதலியை நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதும் தெரியவந்தது. அவர்களை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    Advertisement

    காதல் என்ற பெயரில் பெண்கள் எப்படி சீரழிகிறார்கள், காதலன் கூப்பிட்டான் என்பதற்காக டேட்டிங் என்ற பெயரில் சுற்றுவது எவ்ளவு ஆபத்தானது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். படிக்கும் வயதில் காதலில் விழும் சிறுமிகள், காதலை அடைவதற்காக வாழ்க்கையை தொலைத்து உள்ளார்கள். ஆனால் அந்த காதல் 3 மாதம் கூட தாங்குவது இல்லை..

    Advertisement

    அப்படியே தாண்டினாலும் குழந்தை பிறந்த பின்னர் நிலைமை மோசமாகிறது. வேலைக்கு போகாமல் சுற்றும் குடிகார கணவன், ஏற்காத பெற்றோர் என எதிர்காலம் சூனியமாகிறது. சில சமயங்களில் படிக்கும் போதே தவறான பாதையில் காதலன் தள்ளிவிடுவதும் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆத்திக்காட்டைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). பெயிண்டரான இவர் பிளஸ்-2 மாணவியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார். சம்பவத்தன்று சஞ்சய் மோட்டார் சைக்கிளில் பிளஸ்-2 மாணவியை அழைத்து கொண்டு ஆத்திக்காடு கருமேனி ஆற்றங்கரை காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

    Advertisement

    பின்னர் அவர் தன்னுடன் பெயிண்டர் வேலைக்கு வரும் நண்பர்களான நாசரேத் அருகே கச்சனாவிளை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமணி மகன் உபேஷ் தர்மா (21), உடன்குடி முத்துநகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் முத்தரசன் (18) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு அழைத்துள்ளாராம். அதன்படி அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்தனர். காட்டு பகுதியில் 3 வாலிபர்களுடன் பிளஸ்-2 மாணவி தனியாக இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மடக்கி விசாரித்தனர். அப்போது காட்டு பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று உல்லாசமாக இருக்க முயன்றதும், மேலும் காதலியை நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதும் தெரியவந்தது.

    Advertisement

    தங்களிடம் சிக்கிய 3 இளைஞர்களையும், மாணவியையும் பொதுமக்கள் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், சஞ்சய், உபேஷ் தர்மா, முத்தரசன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் அருகே காதலன் மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English Summary

    Near Sathankulam in Tuticorin district, a young man took a Class 12 student to a wooded area; a total of three people went there. Meanwhile, local residents spotted the Class 12 student alone with three young men in the forest area and apprehended them.