தவெக அரசை ஸ்தம்பிக்க ஊழல் அதிகாரிகள் சதி.. விஜய்க்கு வைகோ அட்வைஸ்

  • தூத்துக்குடி: தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டி வருகிறார். இந்நிலையில் தவெக அரசை ஸ்தம்பிக்க வைக்க ஊழல் அதிகாரிகள் சதி செய்வதாக வைகோ பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "இந்த ஆள் மைக் எடுத்தால் விடமாட்டான் போல என நினைப்பார்கள். ஒரு கல்யாண தம்பதியை வாழ்த்த தகுதி பெற்றவன் நான். என்ன தகுதி என்கிறார்களா. நான் என்னுடைய துணைவி ரேணுகா தேவி போல ஒரு குடும்பம் இருக்க வேண்டுமென சொல்வதற்கு தகுதி பெற்றவன் நான். அதனால் தான் இதை வெளிப்படையாக சொல்கிறேன். என் வாழ்நாள் சாதனையை என் மனைவிக்கு டெடிகேட் செய்துள்ளேன்.

    Advertisement

    கஷ்டம் கூடாது

    என்னுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஒவ்வொரு நேரத்திலும் எனக்கு ஊக்கமளித்தார். என்னுடைய துன்பங்கள், கஷ்டங்களையும் எல்லாவற்றையும் அவர் தாங்கி கொண்டார். ஒரு நகையோ, புடவையோ கூட கேட்காமல் இருப்பார். இப்படி ஒரு இல்லற வாழ்க்கை யாருக்கும் அமையாது. அதுபோல எல்லாருக்கும் அமைய வேண்டும். எங்களை போல யாரும் கஷ்டமும் வரக்கூடாது என வாழ்த்துவேன்.

    மனதளவில் நீங்கள் ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும். இருந்தால் இந்த தம்பதி போல இருக்க வேண்டுமென அனைவரும் வாழ்த்த வேண்டும். மாப்பிளையின் அப்பா அம்மா பெருமைப்பட வேண்டும். மணமகளின் அப்பா அம்மா, என்னடா இவ்வளவு தொலைவில் மகளை கொடுக்கிறோம் என்கிற உணர்வு வலிகளை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அவர்களின் சந்தோஷம் முக்கியம். அப்போது உங்களின் இல்லற வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.

    Advertisement

    ஊழல் அதிகாரிகள் முயற்சி

    ஊழலை ஒழிக்க முதலமைச்சர் முயற்சிக்கிறார். லட்சங்கள், கோடிகள் கைமாறிய அதிகாரிகள் உள்ளனர். நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர். வீட்டில் கொட்டோ கொட்டு பணம் கொட்டிய அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க எந்த பைலையும் நகர்த்துவதில்லை. எந்த கோப்புகளும் நகர்வதில்லை. அவர்கள் அரசை முடக்க நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து விடுவித்து, நேர்மையானவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்க முதலமைச்சரிடம் சொல்லியுள்ளேன்" என்றார்.

    English Summary

    MDMK Vaiko said, Corruprtion officers trying to spoil Government. I had gave advise to Vijay to replace them with honest officers.