தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று வந்த பின், 5 மணியளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் வீடியோ பக்தர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 108 சங்கு பூஜை, 108 கலச பூகையை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து 5 மணியளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பின் கொடி மர பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் விரதிம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது. இந்த திருவிழாவில் பங்கேற்க நேற்றிரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் பக்தர்கள் முழக்கத்துடன் திருவிழாவுக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது தீபத்தை கைகளில் உயர்த்தி பிடித்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். இந்த திருவிழா நாட்களில் தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உழா வரவுள்ளார். அக்டோபர் 20ஆம் தேதி இரவு 12 மணிக்கு தசரா விழாவின் உச்ச நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கிடைத்த.. 9 சவரன்! தங்க மனசு கொண்ட பக்தர்கள் தாராளம்!