துணை பொதுச்செயலாளராகும் அப்பாவு? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கனிமொழி.. என்ன நடக்குது?

  • தூத்துக்குடி: தென் மண்டலத்தில் இருந்து திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால், அந்தப் பதவியை அப்பாவு-வுக்கு கொடுக்கலாம் என்று முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்.

    Advertisement

    திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ள முப்பெரும் விழாவுக்கு பின் திமுகவில் படிப்படியாக மறுசீரமைப்பு பணிகள் வேகம் எடுக்கும் என்று தெரிகிறது. இதனால் மாவட்டச் செயலாளர்கள் பதவியை பிடிக்க வேண்டும் என்பதில் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    Advertisement

    அதேபோல் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி எண்ணிக்கையையும் உயர்த்த ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். அந்த வகையில் தென் மண்டலத்தில் ஒரு சிலருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருடனும் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார்.

    துணைப் பொதுச்செயலாளர் பதவியை மனதில் வைத்துதான் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பேசி வந்தார். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பின் தூத்துக்குடி மாவட்ட அரசியலை கையில் எடுக்கும் நோக்கமும் அதிகமாக இருந்தது. இன்னொரு பக்கம் தூத்துக்குடி மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டால், அந்த பொறுப்பை கைப்பற்ற மார்க்கண்டேயன் தீவிரமாக இருந்தார்.

    Advertisement

    இதன் காரணமாக சில வார்த்தைகளை விட்டு சிறைக்கு சென்றிருந்தார். இதன் மூலமாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை ஓரங்கட்டவும் காய் நகர்த்தப்பட்டது. ஆனால் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக அப்பாவுவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கலாம் என்று கனிமொழி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதே மனநிலையில் தான் உதயநிதி ஸ்டாலினும் இருப்பதாக தெரிகிறது.

    இதனால் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் பணிகளை அனிதா ராதாகிருஷ்ணன் திமுக தலைமையிடம் கேட்டு மேற்கொண்டு வருகிறார். இதனால் கடைசி நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொறுப்பு அளிக்கப்படுமா என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.

    English Summary

    DMK: Appavu Frontrunner for DMK Deputy General Secretary; Former Minister Anita Radhakrishnan Disappointed