உங்க பையன் தான் உங்க கூட இல்லையே சார்.. கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகன் சர்ச்சை

  • தூத்துக்குடி: முதல்வர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன், துப்பாக்கி முனையில் தனது தந்தை மிரட்டப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், "உங்க பையன்தான் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா எனக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைக்கிறார்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    Advertisement

    திமுக சார்பில் கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், கூறிய சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது முன்பு கரூரில் பேசிய முதல்வர் விஜய், சட்டசபையில் தான் பேச ஆரம்பித்தாலே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிடுவதாகவும் இதனால் அவை கதவுகளை மூடிவிட்டு தான் பேச வேண்டும் என்பது போல பேசியிருந்தார்.

    Advertisement

    மார்க்கண்டேயன்

    இந்த கருத்தை கடுமையாக விமர்சித்த மார்க்கண்டேயன், சட்டசபையின் கதவுகள் மூடப்பட்டால் எலும்புகள் உடையும் என்பது போல பேசியிருந்தார். இதுவே சர்ச்சைக்கு காரணம். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன், துப்பாக்கி முனையில் தனது தந்தை மிரட்டப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், தனது தந்தைக்கு சுகர் மற்றும் இதய பாதிப்பு இருப்பதாகவும் அதை கூட கருத்தில் கொள்ளாமல் 13 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் சாடினார்.

    Advertisement

    உங்க பையன்

    இது தொடர்பாக அவர் மேலும், "மூளை தான் உடம்பை இயக்குகிறது. அப்படி ஒரு மாநிலத்தின் மூளையாக இருப்பது சட்டசபை தான். அந்த சட்டசபையிலேயே அனைத்து எம்எல்ஏக்களையும் அடைத்து வைக்க வேண்டும் என இந்த முதல்வர் சொல்கிறார் என்றால் அப்போது இவர்கள் மனநிலை என்ன.. இவர்கள் தாங்கள் செய்வதே சரி என நினைக்கிறார்கள். வரலாறு இதையெல்லாம் பார்த்து இருக்கிறது. இதுபோல செயல்பட்ட அனைவருமே அழிந்து போய் இருக்கிறார்கள். உங்க பையன்தான் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா எனக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைக்கிறார்.. அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம் சார்!

    Advertisement

    துப்பாக்கியை காட்டி மிரட்டல்

    அவர் பேசியதே 5 நிமிடம் தான்.. அவரை கூட்டி சென்று எவ்வளவு நேரம் விசாரிக்கலாம். ஜனநாயக நாட்டில் அதிகபட்சம் 1 மணி நேரம் விசாரிக்கலாம். ஆனால், காலையில் இருந்து 13 மணி நேரம் விசாரித்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே சுகர் இருக்கிறது. இதய பிரச்சனை இருக்கிறது. துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுகிறார்கள். அவர்கள் சொல்வதையே வாக்குமூலமாக தர வேண்டும் என மிரட்டுகிறார்கள். இதற்காக அழுத்தம் கொடுக்கிறார்கள். வேறு எதையும் சொல்லக்கூடாது என சொல்லி மிரட்டுகிறார்கள். இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தையும் அணு உள்ளோம்" என்றார்.

    Advertisement

    முன்னதாக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் போலீசாரை கடுமையாக கண்டித்துள்ளனர்.

    English Summary

    DMK MLA Markandeyan has been arrested over his controversial remarks against Chief Minister Vijay(திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகன் சர்ச்சை பேச்சு): Markandeyan son alleged that the MLA was threatened at gunpoint during police interrogation.