விஜய்யை மிரட்டிய திமுக எம்எல்ஏ.. மார்க்கண்டேயன் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு?

  • தூத்துக்குடி: முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசிய, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் விளாத்திக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யை மிரட்டியதற்காக இன்று காலையிலேயே மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருந்தார்.

    Advertisement

    விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசினார். சட்டசபையை மூடினால் விஜய்யின் எலும்புகளை உடைத்து அனுப்புவோம் என்று மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.

    Advertisement

    மார்க்கண்டேயன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இன்று காலை விளாத்திகுளத்தில் இருந்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து தற்போது மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்து இருந்தார். தவெக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் திமுக எம்பி கனிமொழி கூறியிருந்தார்.

    English Summary

    DMK MLA Markandeyan: Vilathikulam police have registered a case against DMK MLA Markandeyan under three sections. The case was registered under sections related to intimidation, disturbing the peace, and inciting hatred. Markandeyan was arrested this morning for using derogatory, singular-form language to criticize Chief Minister Vijay.