முதல் வரிசையில் திரிஷா.. என்னத்தை சொல்ல! நாடு எங்க சார் போகுது! வேதனையுடன் பேசிய மார்க்கண்டேயன்!

  • தூத்துக்குடி: சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டிருக்கிறார். இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது. தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இனி வாழவேண்டிய சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாகத்தான் பேசினேன் என தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக முதல்வர் குறித்து அவதூறு மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், தினமும் அவர் கையெழுத்திட வேண்டுமென நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

    Advertisement

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இறுதி நாளாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது," நடிகை திரிஷா சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது. தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வாழவேண்டிய சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

    நயினார் நாகேந்திரன் நாகரிகமாகத்தான் பேசினேன் என தெரிவித்துள்ளார். நான் நயினார் நாகேந்திரனை சட்டமன்றத்தில் தான் பார்த்துள்ளேன். அரசியல் கட்சியைத் தாண்டி சட்டமன்றத்திற்குள் நாகரிகமாக தான் பேசியுள்ளார். இந்த விஷயத்தைப் பொறுத்த அளவில் யதார்த்தமான ஒரு விஷயம் தான் அது.

    Advertisement

    என்னை வழக்கு போட்டு அலைக்கழிக்கவில்லை. இதெல்லாம் அலைக்கழிக்கிறதா? இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கேள்விக்கு உள்ளாக்குவார்கள். எதுவுமே நடக்காமல் அவர்கள் புத்தராக இருந்து விட்டால் இவர்கள் யோக்கியதியை எப்படி சொல்வது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்து முழுமையான அரசாணை இன்னும் வரவில்லை வந்த பிறகு பார்க்கலாம்." என்றார்.

    English Summary

    DMK MLA Markandeyan questions Trisha’s presence at the Independence Day ceremony and comments on Nainar Nagendran’s remarks.