Vijay: ஸ்பீக்கர் பர்மிஷன் இருக்கா? நான் எம்எல்ஏங்க! போலீஸுடன் திமுக மார்க்கண்டயேன் வாக்குவாதம்

  • தூத்துக்குடி: "சபாநாயகர் பர்மிஷன் இல்லாமல் எம்எல்ஏவை கைது செய்ய முடியாது, கட்சிக்காரங்க புரொட்டக்ஷன் போடுங்கப்பா" என திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசிய நிலையில் அவர் இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    Advertisement

    போலீஸார் விளாத்திக்குளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டிற்குச் சென்றனர். அவரை கைது செய்ய போலீஸ் வருவதை அறிந்த திமுகவினர் அங்கு திரண்டனர். கைதுக்கான வாரண்ட்டை மார்க்கண்டேயனிடம் கொடுத்தனர்.

    அப்போது அவர், "சபாநாயகர் பர்மிஷன் இல்லாமல் எம்எல்ஏவை கைது செய்ய முடியாது, கட்சிக்காரங்க புரொட்டக்ஷன் போடுங்கப்பா" என தெரிவித்தார். பின்னர் அவரை போலீஸார் வெளியே அழைத்து வந்தனர்.

    மார்க்கண்டேயனை வேனில் ஏற்றிய போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள், "போலீஸ் அராஜகம், தவெகவின் ஏவல் துறை" என கோஷமிட்டனர். இதையடுத்து காவல் துறை வேன் கிளம்பிய போது சாலை மறியலில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

    Advertisement

    பின்னர் அவர்களை அப்புறப்படுத்திய போலீஸார் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல்வரை விமர்சித்ததாக கைது செய்யப்படும் இரண்டாவது எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்.

    அப்படி அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக சட்டசபை உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசுகையில்
    இவ்வளவு கேவலமான முதல்வரை (விஐய்) தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே எந்த மாநிலமும் பெற்றது கிடையாது.

    Advertisement

    இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள்.

    ஆனால் சட்டசபையில் "உங்கப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன்" என விஜய் விமர்சித்துள்ளார். இது போல் ஒரு பேச்சை நான் எங்கேயும் கேட்டதில்லை.

    எங்களை என்ன கோமாளிகள்னு விஜய் நினைக்கிறாரா, சட்டசபைக்குள் வைத்து பார்த்துக் கொள்வோம். சட்டசபையை கூட்டும் போது விஜய்யின் எலும்பை உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். தைரியமிருந்தால் சட்டசபையை கூட்டி பார்க்கட்டும்.

    Advertisement

    யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து சென்னைக்கு ஓடியது யார்? நாங்க ஒன்னும் பயந்து ஓடல. என்னாது கொளத்தூர் தொகுதியில் கொத்து பரோட்டா போட்டீங்களா? இதை போல் ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

    விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது திமுக. இன்றைக்கு தமிழகத்தில் மூன்று வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.

    அடுத்த நாள் என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை முதல்வருக்கு கிடையாது. அவருடைய அமைச்சருக்கு கிடையாது. 2000 ரூபாய் காசு வாங்கியதற்காக திருச்செந்தூர் கோயில் குருக்களை சஸ்பெண்ட் செய்கிறார் அமைச்சர் ரமேஷ்! ஆனால் ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

    Advertisement

    எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம் திமுகவிற்கு என்று ஒரு அறம் இருக்கிறது என்றார். இந்த விமர்சனத்திற்கு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    Vilathikulam DMK MLA Markandeyan says that MLA cannot be arrested without Assembly speaker's permission, As he spoke about CM Vijay in a threating way.