எம்எல்ஏக்களை நம்பாத விஜய்! ஒருநாள் ஓட போறாங்க..தவெக ஆட்சி கவிழப் போகுது! அனிதா ராதாகிருஷ்ணன் அட்டாக்

  • தூத்துக்குடி: தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் மீது தமிழக முதல்வர் விஜய்க்கு நம்பிக்கை இல்லை எனவும், விரைவில் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் பொங்கி எழுவார்கள். இந்த ஆட்சி கவிழும் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வஉசி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் திருவுருவை சிலைக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Advertisement

    பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," இங்கே இருக்கிற ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். குறிப்பாக டெல்டா பகுதியில் இருக்கிற மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    சூழ்நிலையில் மேகதாது அணை பிரச்சனைகளை எடுத்து பாரத பிரதமரை அணுகி உடனடியாக அந்த பகுதிக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் எதையோ குழப்பிக் கொண்டிருக்கிறார். தவிர அவர் ஆட்சி செய்யவில்லை. அவர் ஆட்சி செய்யவில்லை மக்களை ஏமாற்றுவதற்கு என்னென்ன வழி உண்டோ? அதை மட்டும் தான் செய்கின்றார்கள்.

    தஞ்சையில் டெல்டா பகுதியில் இருக்கின்ற மக்கள் இந்த முதலமைச்சர் தேவையா? என்று கேட்கின்ற நிலை இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தில் இருக்கின்ற எம்எல்ஏக்கள் மீது இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லை. எம்எல்ஏக்கள் எங்கேயாவது திடீரென்று ஓடிவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

    Advertisement

    அதனால் இது போன்ற மிரட்டல்களை ஏற்படுத்தினால் அவர்கள் எங்கேயோ போகாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நிலையை முதலமைச்சர் எடுத்திருக்கிறார். என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி, மொத்தமாக தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்கள் ஒரு நாள் கிளம்பி எழுவாளர். இந்த ஆட்சி கவிழும்." என்றார்.

    English Summary

    Anitha Radhakrishnan alleges CM Vijay distrusts TVK MLAs and claims the Tamilaga Vetri Kazhagam government will eventually collapse.