எம்ஜிஆரும் நீயும் ஒண்ணா.. மீண்டும் விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்

  • தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினர் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விஜயை ஒருமையில் மரியாதை குறைவாக விமர்சித்தற்காக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது, இந்நிலையில் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு அவரை மீண்டும் ஒருமையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.

    Advertisement

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "கொளத்தூரில் இவர் 5 நிமிடம் பேசினாராம். கொத்து புரோட்டோ போட்டுவிட்டார்களாம். எவ்வளவு திமிறு பாருங்க. இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட நீ வெற்றி பெற முடியாது. உனக்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று புலம்புகிறார்கள். தேர்தலில் மாதா கோயிலில் முட்டி போட்டு நடந்தனர்.

    Advertisement

    தேர்தல் முடிந்தவுடன் திருச்செந்தூரில் வேல் எடுத்து வந்து நின்றார். எம்ஜிஆர் மைசூர் மூகாம்பிகை கோயில் சென்று வாள் கொடுத்தார். இவரும் அவரை போல அந்த கோயில் சென்று வாள் கொடுத்தார். எம்ஜிஆருக்கும் உனக்கும் ஏணி வைத்தால் எட்டுமா. அவர் வரலாறு என்ன. அவர் எத்தனை ஏழைகளுக்கு உதவினார். திமுகவில் தலைவர்களாக இருப்பவர்கள் கூட அவரிடம் உதவி பெற்றவர்கள் தான். கடுமையான நெருக்கடியில் எங்கள் தங்கம் என்கிற படத்தில் நடித்தார்.

    நீங்கள் எந்த மக்களுக்காக, எந்த தொழிலாளி்க்கு ஏதாவது செய்துள்ளீர்களா. பெண்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா. உடனே யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் த்ரிஷாவை சொல்கிறேன் என்று யாராவது தப்பாக நினைக்காதீர்கள். எந்த பெண்களுக்காவது உதவி செய்திருக்கிறாரா. உங்கள் தலைவர் ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். நீ சினிமாவில் ஆட்டம் போட்டாய். எழுதி கொடுத்தால் பேசுவார். அவ்வளவு தான்.

    Advertisement

    பேசிவிட்டு சைகை செய்வார். எதிர்க்கட்சி தலைவர் இருக்கும்போது, முதலமைச்சர் தலையை கீழே குனிந்து தான் இருப்பார். குதிரை பேரம் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள 23 எம்எல்ஏக்களிடம் சால்வை போட்டு, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெக பணம் கொடுத்து இணைய வைப்பது யார். குதிரை பேரம் செய்வது யார். திமுகவா, தவெகவா" என்றார்.

    English Summary

    Former Minister Anitha Radhakrishnan, against whom the police had already registered a case for criticizing Vijay disrespectfully using the singular form of address, has once again courted controversy by comparing Vijay to Trisha and criticizing him in the same disrespectful manner.