இந்த கேடுகெட்ட அரசியல் எனக்கு பிடிக்காது! 7 ஆண்டு கால வேதனை! கோவில்பட்டியில் துரை வைகோ கண்ணீர்

  • கோவில்பட்டி: எனக்கு அரசியல் பிடிக்காது, நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை.பலரது நிர்பந்தத்தால்தான் வந்தேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் மதிமுக கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அவர் காலமானார்.

    Advertisement

    அவரது நல்லடக்கம் இன்று நடைபெற உள்ள நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    விஜய் முதல்வர் ஆவார்னு யார் எதிர்பார்த்தாங்க.. தனுஷை குறைச்சு மதிப்பிட முடியாது.. துரை வைகோ

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது: ஒன்றியச் செயலாளர் கடலையூர் மாரிச்சாமியின் இறப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று தனது பேச்சைத் தொடங்கிய துரை வைகோ, சில நிமிடங்கள் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.

    Advertisement

    அரசியல் பிடிக்காது

    எனக்கு அரசியல் பிடிக்காது. அரசியல்வாதி என்று சொல்ல மாட்டேன்; அரசியல் வியாதி என்றுதான் சொல்வேன் என்று நா தழுதழுக்க, கண்ணீருடன் தனது பேச்சைத் தொடர்ந்தார். என்னுடைய அரசியல் பயணத்தில் நல்ல விஷயங்களைச் செய்யும்போது சாதாரண மக்கள் கண்ணீர் மல்க நன்றி சொல்வார்கள். பொதுமக்களுக்கு நன்மை செய்வதுதான் அரசியல். ஆனால், கேடுகெட்ட அரசியலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்கிறேன்.

    விஜய் ஆட்சி 3, 6 மாதம்தானா?.. உங்கள் எண்ணம் நடக்காது.. 5 ஆண்டுகளும் விஜய்தான் முதல்வர்.. வைகோ உறுதி

    டிஎன்ஏ தனி

    சாதாரண மனிதர்களும், மனசாட்சி உள்ளவர்களும் அரசியல் பயணத்தில் பயணிக்க முடியாது. இன்றைக்கும் எனக்கு அரசியல் பிடிக்காது; அரசியல்வாதிகளையும் பிடிக்காது. அரசியல்வாதிகளின் DNA தனி, அவர்களின் குணாதிசயங்களும் தனி. அதற்கு சிலர் விதிவிலக்காக இருக்கின்றனர். இதில் நல்லகண்ணு, மதிமுக மற்றும் பொதுவுடைமை இயக்கங்களில் உள்ள சிலர் விதிவிலக்கானவர்கள். அவர்களில் மறைந்த மாரிச்சாமியும் ஒருவர்.

    Advertisement

    30 கிராமங்கள்

    கடலையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 30 கிராமங்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடலையூரில் துணை மின் நிலையம் அமைக்க மறைந்த கடலையூர் மாரிச்சாமி, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தைத் தானமாக வழங்கினார்.

    5 லட்சம் ரூபாய்

    இன்றைக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கக் கூட யோசிக்கக்கூடிய நிலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். திமுக ஆட்சியில் கடலையூரில் துணை மின் நிலையம் அமைக்கக் கோரிக்கை வைத்தோம். அந்தத் துறைக்கு அமைச்சர்கள் மாறினார்களே தவிர, துணை மின் நிலையம் அமைக்கப்படவில்லை.

    Advertisement

    ஆட்சி மாறியதும் தற்போதைய மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தோம். அதற்கான பணிகளையும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    7 ஆண்டு காலம்

    என்னுடைய ஏழு ஆண்டு அரசியல் பயணத்தில் எவ்வளவோ விஷயங்களைச் சாதித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய கட்சி நிர்வாகியும் விவசாயியுமான ஒருவர் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதைச் செய்து கொடுத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

    இந்தியில் உரையாற்றிய துரை வைகோ..

    இருக்கின்ற வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்துவிட்டு செல்லலாம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் மறைந்த கடலையூர் மாரிச்சாமி. வாழ்க்கை சட்டென்று போய்விடும். இப்போதுதான் படித்தது போல இருக்கும். வேலை, திருமணம் எனக் கடகடவென நடக்கும். அதன் பிறகு குழந்தைகள், பேரக்குழந்தைகள் எனக் காலம் ஓடிவிடும். இந்தக் குறுகிய கால வாழ்க்கையில் வன்மம், பகைமை வேண்டாம். இவை இரண்டும் வரும்.

    Advertisement

    மதிமுக தலைவர் வைகோ

    ஆனால், நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நான்கு பேருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மதிமுக தலைவர் வைகோவின் பேச்சை ரசித்தால் மட்டும் போதாது; அவரைப் போன்று வாழ வேண்டும். அதற்கு உதாரணம் மறைந்த கடலையூர் மாரிச்சாமி.

    நான் இங்கு அழுதது என்னுடைய வேதனை. ஏழு ஆண்டு கால அரசியல் பயணத்தின் வேதனை. எனக்கு அரசியல் பிடிக்காது. பலரின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்தேன். போஸ்டரில் பெயர் போடவில்லை, எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை, உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தலைமை மீது கோபித்துக் கொண்டு, தலைமைக்கும் கட்சிக்கும் எவ்வளவு இடையூறு கொடுக்கிறீர்கள்?

    வாய்ப்பு கிடைத்தவர்கள்

    வாய்ப்பு கிடைத்தவர்களும், அடுத்த முறை எனக்குத்தான் வாய்ப்பு வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சியை விட்டுச் செல்வார்கள்; தலைமைக்கு எதிராக ஏதாவது செய்வார்கள். இது மதிமுகவில் மட்டுமல்ல; எல்லா அரசியல் கட்சிகளிலும் உள்ளது. ஆனால், மதிமுகவில் இது இருக்கக் கூடாது. மனதில் இருந்து பேசுகிறேன். என்னுடைய ஏழு ஆண்டு அரசியல் பயணத்தில் என்னைத் தொடர்ந்து பயணிக்க வைக்கும் சில நிகழ்வுகள், சில மனிதர்களில் ஒருவர் கடலையூர் மாரிச்சாமி.

    கடலையூர் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற மறைந்த மாரிச்சாமியின் கோரிக்கை உறுதியாக நிறைவேற்றப்படும். விரைவில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றார்.