ப்ரூவ் பண்ணுங்க.. போதை பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாருக்கு கீதா ஜீவன் சவால்! விஜய்க்கும் அட்வைஸ்

  • தூத்துக்குடி: தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பதை அமைச்சர் சரத்குமார் மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் விஜய் சரத்குமார் போன்ற அமைச்சர்களை வைத்திருக்கும் போது தமிழ்நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் சரத்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் ஈ. வெ. அ. வள்ளிமுத்து நாடார் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    Advertisement

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    கீதா ஜீவன்

    தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன்னா அவர்களுடைய நடவடிக்கைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தது. நம்ம பார்த்து கொண்டு தான் இருந்தோம். அதுபோல எங்களுடைய தலைவர் சொன்னது மாதிரிதான். நாங்களாக எந்த கூட்டணியும் வேண்டாம் என்று சொல்றது இல்லை. அவரக்ளாக விருப்பப்பட்டு போகும்போது நான் தடுக்கவும் மாட்டேன்னு சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    திமுக

    திமுக தனித்து போட்டியிட வேண்டும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். நிச்சயமாக திமுக பலப்படும். திமுக எல்லா செயல்வீரர்களும் வேகத்தோடு பணியாற்றுவார்கள். முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு வீடுகளில் சோதனை என்பது ஏற்கனவே 2022ல் கொடுக்கப்பட்ட புகார். அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒன்றுதான், பழைய புகாரை எடுத்துள்ளார்கள். அதில் ஒன்றும் நடக்க போவது இல்ல. இது அரசியல் பழிவாங்கும் செயல்.

    டெல்லி பிரதிநிதி

    டெல்லி பிரதிநிதியாக கன்னடத்தை சேர்ந்த வரை போட்டு இருக்காங்க.. அதுவும் ஜனநாயகன்பட தயாரிப்பாளராம். அவர் கர்நாடகாக்காக நிற்பாரா அல்லது தமிழகத்திற்காக நிற்பாரா? ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருந்து செயல்படுவது தான் டெல்லி பிரதிநிதி.. மேலும் தமிழக வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். காவிரி, மேகதாது அணை பிரச்சனையில் அவர் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருப்பாரா அல்லது தமிழகத்திற்கு ஆதரவாக இருப்பாரா?

    Advertisement

    முதல்வர் விஜய்

    தயாரிப்பாளர் என்பதற்காக ஒரு பொறுப்பு கொடுக்கின்றார் என்றால், முதல்வர் விஜய் ஏன் இப்படி செய்றீங்க, கண்டிக்கத்தக்கது, நிச்சயமாக அவரை மாற்றியாக வேண்டும். நல்ல அரசியல் நோக்கத்தோடு பொதுவாழ்வில் இருந்த ஒரு மூத்த தலைவருக்கு பொறுப்பு கொடுத்தால் நிச்சயமாக அந்த பதவிக்கு ஒரு மரியாதையாக இருக்கும்.

    அமைச்சர் சரத்குமார்

    போதை ஒழிப்பு தொடர்பாக முதல்வர் ஒரு மராத்தான் நடத்தும் போது அமைச்சர் சரத்குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஒரு தில்லான செயலை செய்றேன் பாருன்ற ஒரு தக் லைப்ன்ற ஒரு ஹெட்டிங்ல அந்த வீடியோ போட்டுருக்காரு. நான் என்ன சொல்றேன் செஞ்சு காமிக்க சொல்லுங்க, இதே மொபைல வச்சு,பிள்ளைக்கு மாத்திரைய அதே ஏடிஎம் கார்டு வச்சு நொறுக்கி காமிக்க சொல்லுங்க உண்மை தெரியும்.

    Advertisement

    நடவடிக்கை

    இல்லையா அமைச்சர் மெடிக்கல் சர்டிபிகேட் மூலம் ப்ரூவ் பண்ணட்டும் நான் போதை எடுக்கறவன் கிடையாதுன்னு. அப்பட்டமா தெரியுது அந்த வீடியோல, அதனால முதலமைச்சர் இது மாதிரி அமைச்சர் வச்சிருக்கும்போது தமிழ்நாடு எதை நோக்கி பயணிக்கும், இந்த அமைச்சர் மேல உரிய நடவடிக்கை உடனடியாக முதலமைச்சர் எடுக்க வேண்டும்" என்றார்.

    English Summary

    Geetha Jeevan demands proof from Minister Sarathkumar and urges CM Vijay to take action over the controversy.