தூத்துக்குடி: திரைத்துறை என்ன தீண்டத்தகாத துறையா? திரைத்துறையில் இருந்து தான் பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள் என திரைத்துறையினருக்கு அரசு பதவிகள் கொடுக்கப்படுவது குறித்த விமர்சனத்திற்கு அறநிலையதத்துறை தேர்வுக்குழு உறுப்பினரும் பின்னணி பாடகருமான வேல்முருகன் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு நடைபெறும் பக்தி கச்சேரியில் பாடல் பாட வந்த அறநிலையத்துறை தேர்வுக்குழு உறுப்பினரும், பிரபல பாடகருமான வேல்முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நவராத்திரியை முன்னிட்டு கோவில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மையை தரிசனம் செய்து பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாடகர் வேல்முருகன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தமிழகத்தில் உள்ள அனைத்து துறையும் சிறப்பாக உள்ளது. இதனை மக்கள் வாழ்த்துகிறார்கள் என்றார். முதன்முறையாக இந்த நவராத்திரி நாளில் இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று நான் பாட வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய வேல்முருகன், இயல் இசை நாடக பிரிவில் தலைவராக கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளது உண்மையிலே சந்தோஷமாக உள்ளது. நாட்டுப்புற கலைக்கும், கிராமிய கலைக்கும் தமிழக முதல்வர் மகுடம் சூட்டியுள்ளார் என்பது பெருமிதமாக உள்ளது. தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கிராமிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அவர் தனது கட்சி துவக்க விழாவிலும் கிராமிய பாடகிகள் நாட்டுப்புற கலைஞர்களை பாட வைத்துள்ளார். நானும் மூன்றாவது ஆண்டு கட்சி துவக்க விழாவில் பாடியுள்ளேன் . எல்லாத் துறையிலும் உள்ள பதவி யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நிதானமாக சரியாக யோசனை செய்து கொடுத்துள்ளார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினார். திரைத்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் திரைத்துறையினருக்கு அரசு முக்கிய பதவிகள் அளிக்கப்படுவது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பின்னணி பாடகர் வேல்முருகன், திரைத்துறை என்பதும் ஒரு தொழில் தான்.. திரைத்துறை என்ன தீண்டத்தகாத துறையா? திரைத்துறையில் இருந்து தான் பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றார். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா : தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி விஜய்யின் நீண்டகால மேலாளர்; திரைப்படத் தயாரிப்புப் பணிகளிலும் தொடர்புடைய ஜெகதீஷ் பழனிசாமி : முதல்வரின் அரசியல் தனிச் செயலர் ஒளிப்பதிவாளர்; நண்பன், பீஸ்ட், லியோ உள்ளிட்ட விஜய்யின் படங்களில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா : எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத் தலைவர் பிகில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி இந்து சமய அறநிலையத் துறைக் கோயில் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினர் பின்னணிப் பாடகர்; விஜய்யின் அரசியல் பிரசாரப் பாடல் பாடிய பாடகர் வேல்முருகன் : கோயில்களுக்கான அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினர் கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி : இயல் இசை நாடக பிரிவு தலைவர்62 லட்சம் குழந்தைகள் ஒரு பைலட் பிராஜக்ட் அல்ல.. கேக் திட்டத்திற்கு எதிர்ப்பு.. அரசுக்கு கோரிக்கை
விஜய் ஆட்சியில் பதவி பெற்ற திரையுலகினர் விவரம்
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? ஸ்டாலின் கிண்டல்