3 மாதமாக பதவி கொடுக்காம இருக்காங்க.. அப்செட்டில் கடம்பூர் ராஜு.. பின்னணியில் விஜய் நண்பர் ஸ்ரீநாத்!

  • தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடுமையான அப்செட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு பின் தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு பதவி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கடம்பூர் ராஜுவுக்கு பதவி அளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அமைச்சர் ஸ்ரீநாத் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பின், அதிமுகவில் இருந்து சாரை சாரையாக தவெகவில் பலரும் இணைந்தனர். சிட்டிங் எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று சீனியர்கள் பலரும் தவெக பக்கம் வந்தனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஜூன் 6ஆம் தேதியே பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்து புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

    Advertisement

    அப்போதே புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் நிச்சயமாக மரியாதையும், பொறுப்பும் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதன்பின் விஜயபாஸ்கர்கள் இருவரும் தவெக பக்கம் வந்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

    மாவட்டச் செயலாளர், இணை பொதுச்செயலாளர், அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர்கள் என்று ஏராளமானோருக்கு பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியலில் கடம்பூர் ராஜுவின் பெயர் இடம்பெறவில்லை. அப்போதே கடம்பூர் ராஜு அப்செட்டாகினார். ஆண்மையில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு கூட அரசு பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் வ.உ.சி பிறந்தநாள் விழாவில் கட்சி சார்பில் மரியாதை செலுத்தும் நிர்வாகிகள் பட்டியலில் கூட கடம்பூர் ராஜு பெயர் இடம்பெறவில்லை. இதனால் கடம்பூர் ராஜு தனது ஆதரவாளர்களிடம் என்ன சொல்வதென்று புரியாமல் திணறி நிற்கிறார். கடம்பூர் ராஜுவுக்கு எந்த பொறுப்பும் அளிக்கக் கூடாது என்பதில் அமைச்சர் ஸ்ரீநாத் பிடிவாதமாக இருக்கிறார்.

    ஏனென்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக சார்பாக வென்ற ஒரே எம்எல்ஏ ஸ்ரீநாத் தான். இதனால் ஒரே பவர் செண்டராக தாம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார். கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செல்வாக்கான நபர் என்பதால், அவருக்கு பொறுப்பு கொடுத்தால் நம்மை ஓரங்கட்டிவிடுவார் என்று தெளிவாக இருக்கிறார். இதனால் அமைச்சர் ஸ்ரீநாத் தெளிவாக பனையூரில் காய் நகர்த்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Kadambur Raju: Minister Srinath Allegedly Behind Delay in Kadambur Raju TVK posting Appointment