த்ரிஷா குறித்து அசிங்கமாக பேசிய திமுக நிர்வாகி.. கனிமொழிக்கு வந்துச்சே கோபம்.. மேடையில் களேபரம்!

  • தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக போராடியது. ஆனால் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியானது. இந்த தோல்வி திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மற்றும் தவெக மீது திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலையில் ஒரு நிர்வாகி த்ரிஷா குறித்து தவறாக பேசியுள்ளார். அப்போது கனிமொழி குறுக்கிட்டு அவரை கண்டித்து அறிவுரை வழங்கினார். என்ன நடந்தது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் தோல்வியால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ், தவெக மீது அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அதே மாவட்டத்தில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

    Advertisement

    கனிமொழி கூட்டம்

    சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து திமுக மாவட்டம், தொகுதி வாரியாக ஆய்வு செய்து வருகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, நம்மை நாம் பலப்படுத்திக்கொண்டால் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற முடியும். விரைவில் நம்முடைய பலத்தை நிரூபிப்போம். கூட்டணி பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. யாருடைய ஆதரவும் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியும் என்று பேசியுள்ளார்.

    கனிமொழி தூத்துக்குடி மாவட்ட திமுகவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு நிர்வாகியும், திமுக தோல்வி குறித்து தங்களின் கருத்துகளை பேசினர்.

    Advertisement

    த்ரிஷா குறித்து சர்ச்சை

    அப்போது ஒரு திமுக நிர்வாகி நடிகை த்ரிஷா குறித்து தவறாக பேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. கனிமொழி துளி கூட தாமதமில்லாமல் உடனடியாக குறுக்கிட்டு அந்த நிர்வாகியை கண்டித்தார். "எந்த பெண் குறித்தும் நாம் அவதூறாக பேசக் கூடாது. நாம் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதனால் பெண்கள் குறித்து நாம் தரக்கறைவாக பேசக் கூடாது" என்று மேடையில் அறிவுறுத்தினார்.

    English Summary

    Kanimozhi: Tuticorin DMK member controversy remark on Actress Trisha. Kanimozhi condemned on stage and gave advise.