ரீல்ஸ் எடுக்கவே சட்டசபை நடக்குது.. தவெக செயல்பாடு அப்படிதான் இருக்கு.. பாய்ண்ட்டை பிடித்த கனிமொழி!

  • தூத்துக்குடி: சட்டசபையே ரீல்ஸ்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தவெகவினர் உருவாக்கி கொண்டிருப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்த பின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய கனிமொழி, அதில் தவெகவினர் அதிகமாக சம்மந்தப்பட்டிருப்பது தொடர்கதையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைக் கூட்டத்தொடர் நேரலை செய்யப்பட்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் முதல்முறையாக சட்டசபை வந்த தவெக உறுப்பினர்களின் பேச்சுகள் தொடர்ச்சியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக எதிர்க்கட்சியினர் பேசும் வார்த்தைகளை தான் அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குவார்.

    Advertisement

    ஆனால் தவெக ஆட்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பேசும் வார்த்தைகள் தொடர்ந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அமைச்சர் ரமேஷ் பேசும் போது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று கூறிய போது, நீக்கி கொள்ளுங்கள் என்று பதில் அளித்திருந்தார்.

    இது சபாநாயகருக்கே கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவைக்குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கப்படுவதை எந்தவித வருத்தமும் இல்லாமல் தவெகவினர் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வீடியோக்களை தவெகவினர் தங்களின் சோசியல் மீடியா பக்கங்களில் ரீல்ஸாக வெளியிடுவதையும் வழக்கமாக்கி இருக்கின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் குற்றங்கள் தொடர்ந்து பெருகி கொண்டே வருகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக் அப் டெத் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் சூழலை பார்த்து வருகிறோம்.

    இதில் பல குற்றங்களை செய்திருப்பவர்கள் தவெகவை சேர்ந்தவர்களாகவே இருப்பதை பார்க்கிறோம். சில நேரங்களில் தான் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நேரங்களில் தவெகவினர் தொடர்புடைய குற்றங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதனால் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்வியாக தவெக ஆட்சியில் மாறி இருக்கிறது.

    Advertisement

    அதேபோல் சட்டசபையே ரீல்ஸ்காக தான் நடந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை தவெகவினர் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் என்றும் சாடியுள்ளார். கனிமொழியின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    English Summary

    Kanimozhi: Running Assembly for Reels, DMK MP Kanimozhi Launches Scathing Attack on TVK Government