குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசை தசரா முத்தாரம்மன் கோவில் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு 41 நாட்கள் விரதம், 21 நாட்கள் விரதம் என பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். பக்தர்களும் காளி உள்ளிட்ட வேடம் அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேரகப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.

    Advertisement

    நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு 41 நாட்கள் விரதம், 21 நாட்கள் விரதம் என பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது வழக்கம். தசரா திருவிழா நாளை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    காப்பு அணிந்த பக்தர்கள்

    முன்னதாக இன்று காலை 11 மணிக்கு காளி பூஜை நடைபெற்றது. நாளை அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று, கோவிலை வந்தடையும். அதன்பிறகு, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. இதையடுத்து, விரதம் இருந்து வரும் பக்தர்கள், கோவில் பூசாரியிடம் காப்பு அணிந்து, தங்கள் நேர்ந்து இருந்த வேடங்களை தரித்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    Advertisement

    நாளை முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. 12 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10 ஆம் திருவிழா (அக்.20) சூரசம்ஹாரம் நடைபெறும். கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வில் மகிசாசூரனை அம்மன் வதம் செய்வார். விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கிடைத்த.. 9 சவரன்! தங்க மனசு கொண்ட பக்தர்கள் தாராளம்!

    21 ஆம் தேதி சூரசம்ஹாரம்

    10 ஆம் திருநாளான 20 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். இந்த நிகழ்சியை லட்சக்கனக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    Advertisement

    11 ஆம் திருநாளான 21 ஆம் தேதி அதிகாலையில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருள்வார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். இதன்பிறகு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளி சாந்தாபிஷேகம், தீபாராதனை முடிந்து, தேரில் பவனி வந்து திருகோவிலை வந்தடைகிறார். இதையடுத்து, அம்மனுக்கு காப்பு களைந்தவுடன் பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடிப்பார்கள்.

    அக்., 11ல் தொடங்கும் குலசை தசரா.. ஏற்பாடுகள் தீவிரம்.. கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

    வாகனங்கள் நிறுத்த இடவசதி

    12 ஆம் திருநாளான 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. தசரா திருவிழாவுக்கு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையை ஒட்டி, குலசை அருகே வாகனங்கள் நிறுத்த நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

    English Summary

    Kulasai Dasara: The festival at the Mutharamman Temple in Kulasai, Thoothukudi district, begins tomorrow, Sunday, with the flag-hoisting ceremony. In preparation for the festival, devotees have commenced their observances—some for 41 days and others for 21 days—by wearing the sacred *mala* (garland). Devotees have also begun their penance by donning various costumes, including that of the Goddess Kali.