தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தரசா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு 12-மணிக்கு நடைபெற இருக்கும் நிலையில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 12 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. 10-நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று இரவு குலசேகரபட்டினம் கடற்கரை பகுதியில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, பழனி, ஆகிய 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் இருந்து 12 மாவட்டங்களை சார்ந்த சுமார் 4-ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்களின் வசதிக்காக 240 பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றது. தசரா திருவிழாவிற்காக 265 ஏக்கர் பரப்பளவில் 3-இடங்களில் வாகங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாக பகுதிகளில் 10-கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 7-நகரும் கேமராக்கள் உள்ளிட்ட 5-டிரோன் கேமராக்கள் மற்றும் 5- முக கண்காணிப்பு கேமரா, நிலையான 300-கேமரா ஆகியவை மூலம் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர காவல்படையினர் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றர்.கோவில் நிர்வாகம் தரப்பில் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கைகளை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இன்றுசூரசம்காரம் நடைபெறுவதையொட்டி 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர கழிவறைகளுடன் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகளில் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர், மேலும் ஏழு நகரும் சிசிடிவி வாகனங்கள் மூலமும் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவில் நடைபெறக்கூடிய சூரசம்ஹார நிகழ்வையொட்டி பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் செய்யப்பட்டுள்ளது.