வலதுகரம் மீது பாலியல் புகார் சொன்ன தவெக பெண் நிர்வாகி! கண்ணீருடன் முறையிட்டும் கைவிரித்த ஸ்ரீநாத்!

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர் மற்றும் அமைச்சர் ஸ்ரீ நாத்தின் வலது கரமான ரூஸ்வெல்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதே கட்சியை சேர்ந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீநாத்திடம் தெரிவித்த போது அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தவெகவில் நிர்வாகியாக திருச்செந்தூரில் செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    இந்த நிலையில் இவரிடம் பெரிய பதவி வாங்கி தருவதாக தவெக நகர செயலாளர் நிவாஸ் கண்ணன், செல்போனில் ஆபாச வார்த்தைகள் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் கட்சியில் வேறு பெரிய பொறுப்பு வேண்டுமென்றால் மேலே உள்ள பொறுப்பாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டுமென அந்த பெண்ணிடம் நிவாஸ் கண்ணன் கூறி வந்துள்ளார்.

    பின்னர், நிவாஸ் கண்ணன் குறித்து திருச்செந்தூர் தொகுதி மாவட்ட கழக செயலாளர் பிரைட்டரிடம் புகார் தெரிவித்தாராம் அந்த பெண்.

    ஆனால் பிரைட்டரும் "எங்களை அனுசரித்தால் தான் உனக்கு கட்சியில் பெரிய பொறுப்பு வாங்கித் தருவோம்" என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் மணப்பாடு பகுதியைச் சேர்ந்த தவெக (ஸ்ரீ நாத் வலது கரம் ) ரூஸ்வெல்ட், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட செயலாளர் பிரைட்டர் மற்றும் நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து எங்களை சந்தோஷப்படுத்தினால் மட்டுமே கட்சியில் பெரிய பொறுப்பு வாங்கி தருவோம் என மிரட்டினாராம்.

    வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் வரும்படியும் இரவு நேரங்களில் அழைத்து தொந்தரவு செய்தனராம். இதை தவிர்த்தாலும் மாறி மாறி வாட்ஸ் அப்பில் அசிங்கமான ஆபாசமான படங்களை அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர்.

    மேலும் திருச்செந்தூர் முழுக்க தன்னை வேறு மாதிரி பழக்க வழக்கம் கொண்ட பெண் என இவர்கள் எல்லாம் பொய்யாக பரப்பி வருகிறார்கள் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    Advertisement

    தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான தவெக பெண் நிர்வாகி, தங்களது நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சரிடம் மற்றும் அமைச்சர்களிடம் புகார் கூறுவேன் என மிரட்டினாராம்.

    இவர்கள் ஆபாச படங்கள் அனுப்பியது, வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது எல்லாமே அந்த பெண்ணின் செல்போனில் இருப்பதால் அவரது செல்போனை கூலிப்படையை ஏவிவிட்டு பறித்துச் சென்றதாகவும் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த செல்போன் பறிப்பு தொடர்பாக அந்த பெண் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கூலிப்படை சேர்ந்த செல்போனை பறித்து சென்ற ஆலந்தலையை சேர்ந்த சிபாஸ் மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பேரை கைது செய்து உள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம், அந்த பெண் ரூஸ்வெல்ட் மற்றும் பிரைட்டர் மீது புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்.

    ஆனால் "பிரைட்டர் மற்றும் ரூஸ் விஷயமாக வந்தால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என அமைச்சர் ஸ்ரீநாத் அலட்சியமாக கூறியதாக அந்த பெண் தெரிவிக்கிறார்.

    மேலும் தங்களை பற்றி புகார் அளித்தால் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவோம் என அவர்கள் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய செல்போனை பறித்துச் சென்றதை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார். தான் விஜய் ரசிகையாக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என கட்சியாகியுள்ள நிலையிலும் பணியாற்றி வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்துள்ள நிலையில் அந்த பெண்ணுக்கு தவெக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் இது போன்ற சில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளால் தான் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் தெரிவித்தார்.

    அண்மைக்காலமாக தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்களும் போதை பொருள் பயன்படுத்திய புகார்களும் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது புதிய ஒரு புகார் வந்துள்ளது.

    English Summary

    Minister Srinath is not taking action against his supporters in TVK woman assault complaint. So she gave complaint in SP office.