குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கிடைத்த.. 9 சவரன்! தங்க மனசு கொண்ட பக்தர்கள் தாராளம்!

  • தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் ரூ. 36.73 லட்சம் மற்றும் 9 சவரன் தங்க நகை காணிக்கையாக கிடைத்துள்ளது.

    Advertisement

    திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழா புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகின்ற 11 ம் தேதி தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 20ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.

    Advertisement

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 18 நிரந்தர உண்டியல் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படும்.

    இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணிகள் நடந்தது. தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 36 லட்சத்து 73 ஆயிரத்து 875 ரொக்கமாக வருவாய் வந்துள்ளது. மேலும் தங்கம் 72.500 கிராமும்(9 சவரன்), வெள்ளி 790.000 கிலோ கிராம் கிடைத்துள்ளது.

    பக்தர்கள் காணிக்கையாக கொடுத்திருக்கும் பணம் கோயில்களின் பராமரிப்பு, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும். தங்க நகைகள் தூய தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு கோயிலின் வங்கி கணக்கில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mutharamman Temple Hundi Collection: The Mutharamman Temple in Kulasekarapattinam has received offerings worth ₹36.73 lakh and 9 sovereigns of gold jewelry through the temple hundi.