திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தை சுற்றி இருந்த 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் அகற்றம்

  • தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாழிக்கிணறு பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில் பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை வியாபாரங்கள், பச்சை குத்தும் இடங்கள், இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட கலைஞர்கள், புகைப்பட விற்பனையாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளது. இவற்றை கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி உள்ளது.

    Advertisement

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாழிக்கிணறு பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில் பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை வியாபாரங்கள், பச்சை குத்தும் இடங்கள், இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட கலைஞர்கள், புகைப்பட விற்பனையாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளது.

    Advertisement


    இங்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் இந்த வியாபாரிகள் தங்களின் குடும்பத்தை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக கூறி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்த வியாபாரிகள் மற்றும் கிரிபிரகார நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.

    இதற்காக கிரிபிரகார பகுதிகள், முறை வரிசைப் பகுதிகள் மற்றும் காத்திருப்போர் அறை பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் பூ வியாபாரிகள் பொம்மை வியாபாரிகள், வடை, பழ வியாபாரிகள் ஆகியோர் வியாபாரிகள் தானாகவே வெளியேறிச் செல்ல வேண்டும் என காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தினார்கள்.

    Advertisement

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    ஆனால், பல ஆண்டுகளாக கோவில் வளாகத்தை நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பூ வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் நிர்வாகத்திடமும், பாதுகாப்பு பணியாளர்களிடமும், கோவில் இணை ஆணையர் லோகநாதன் அவர்களிடமும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய வியாபாரிகள், நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    Advertisement

    எனினும் திருச்செந்தூர் கோவில் காவல் அதிகாரிகள், கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் முன்னிலையில் இந்த வியாபாரிகளை கோவில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். திடீரென கோவில் நிர்வாகத்தினர் சிறு வியாபாரிகள் வைத்த கடையை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    In a major crackdown, temple authorities evicted over 500 small shops operating around the Thiruchendur Murugan Temple complex to clear encroachments and ensure hassle-free movement for devotees.