நம்ம கொடுக்கறதை வாங்குவாங்க.. ஓட்டு போட மாட்டாங்களா.. அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சை

  • தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது, தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது. கட்சி கட்டமைப்பே இல்லாமல் தவெக வெற்றி பெற்றதை பார்த்து திமுக, அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய் குறித்து மரியாதை குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் திமுக ஆலோசனை கூட்டத்தில் தவெக கூடுதல் வாக்கு வாங்கியது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். நமக்கு ஓட்டு போடாதவங்க, நாம் கொடுக்கும் எதையும் வாங்க கூடாது என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை திமுக பேரூர், வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார். ஒவ்வொரு பூத் வாரியாக திமுக, தவெக, அதிமுக பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் குறித்து அவர் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார்.

    Advertisement

    தவெக 168.. திமுக 138

    அப்போது ஒரு பூத்தில் திமுகவை விட தவெக அதிக வாக்கு வாங்கியது குறித்து நிர்வாகிகளிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கோபப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணன், "அதிமுக, பாஜக சேர்ந்து ஓட்டு வாங்கியிருந்தால் பரவாயில்லை. தவெகவுக்கு 168 ஓட்டு விழுந்திருக்கே என்ன காரணம். நீங்க தானே பொறுப்பாளர். எல்லார்கிட்டயும் பேசி நமக்கு கூடுதல் ஓட்டு வாங்கியிருக்கணும்ல. இந்த 168 ஓட்டையும், 115 ஓட்டையும் சேர்த்தா எவ்வளவு வரும். மொத்தமாக 283 ஓட்டு வாங்கிருக்காங்க. நமக்கு 138 ஓட்டு தான் வந்துருக்கு. நமக்கு ஏன் ஓட்டு குறைந்சுது" என கேட்டார்.

    Advertisement

    அதற்கு திமுக நிர்வாகிகள், "எல்லா வீடுகளுக்கும் சென்று பேசியுள்ளோம். எல்லாமே கொடுத்துள்ளோம். சினிமாவை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்" என்று கூறினர். இதை கேட்டு கோபமடைந்த அனிதா ராதாகிருஷ்ணன், "மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லையா. வலுவாக உள்ள ஆட்கள் இருந்தும் ஏன் ஓட்டு குறைந்தது" என்று ஒவ்வொரு நிர்வாகியின் பெயர் சொல்லி அழைத்து காரணத்தை கேட்டார்.

    பொருள் மட்டும் வேணுமா

    அதில் திருப்தியடையாத அனிதா ராதாகிருஷ்ணன், "நமக்கு ஓட்டு போட மாட்டேன் என்பவர்கள் நாம் கொடுக்கும் எதையும் வாங்க கூடாது தானே. கவுன்சிலர் தேர்தல் வந்தாலும் இதே நிலை தானே தொடரும். இப்ப வராத ஓட்டு அப்போது மட்டும் எப்படி நமக்கு வரும்" என்று நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தலில் திமுக பணம், பரிசு கொடுத்ததை திமுக முன்னாள் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தவெகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

    English Summary

    DMK Anitha Radhakrishnan said, TVK got more vote than DMK. People need our gift but couldnot vote for made controversy.