தவெக சொதப்பல்.. பேருந்துக்காக முண்டியடிக்கும் மக்கள்.. தொடர் விடுமுறையில் பரிதாபம்

  • தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. தற்போது முழுக்க முழுக்க மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் முழுவதும் தேவையான பேருந்து வசதி செய்யப்படவில்லை என மக்கள் புகார் கூறியுள்ளனர். கைக்குழந்தைகளுடன் மக்கள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காந்தி ஜெயந்தி, நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை நிலவுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மக்கள் பயணித்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக சுமார் 5,000 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழகம் முழுவதும் போதிய பேருந்துகள் இயக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    Advertisement

    பேருந்து வசதி சொதப்பல்

    திருச்செந்தூரில் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்த மக்கள் கூறுகையில், "தொடர்ந்து 5 நாட்கள் பள்ளி விடுமுறை, 3 நாட்கள் அரசு விடுமுறை. வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். அதனால் பக்தர்கள் கோயில்கள் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்யவே 6 மணி நேரமாகிறது. அது முடிந்து சோர்வில் வந்தால் பேருந்து இல்லை. பல பக்தர்கள் குழந்தைகளை வைத்து கொண்டு கால் கடுக காத்துள்ளனர். திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், தேனி, கம்பம் எந்த பகுதிக்கும் பேருந்து இல்லை.

    மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பள்ளி தொடங்கும் வரை தொடர் விடுமுறை நிலவுகிறது. அதனால் மக்கள் திருச்செந்தூர் கோயில் வந்து சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். எந்த வசதியும் இல்லாமல் பரிதாப நிலை தொடர்கிறது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். என்னமோ பஸ் நிறைய விடுவது போல அரசு சொல்கிறது. அது ஒரு தவறான கருத்து. நிலவரம் அப்படி இருக்கிறது.

    Advertisement

    ஒரு பேருந்தில் 300 பேர்

    தொடர் விடுமுறை என தெரிந்த பிறகு அதிக பேருந்துகள் விட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் மக்கள் சிரமப்பட்டிருக்க மாட்டார்கள். இப்போது மிகவும் சிரமமாக உள்ளது. ஒரு பேருந்தில் சராசரியாக 60 பேர் இருக்கலாம் என்றால், 300 பேர் முண்டியடித்து செல்கிறார்கள். பேருந்திலும் இடமில்லை. அதிக பேருந்துகள் இருந்திருந்தால் மக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் திரும்பியிருப்பார்கள். ஆனால் இப்போது திருச்செந்தூர் ஏன் வந்தோம் என நினைக்கிறார்கள். அரசு இதை தவிர்க்க வேண்டும்" என்றனர்.

    English Summary

    People travel to other districts native places due to long week end holiday. but poor arrangement on buses made people suffer.