சாத்தான்குளம் இரட்டை கொலை.. காதல் பெயரில் நடந்த மோதல்! இளைஞர் மீது குண்டாஸ்!

  • தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே, காதல் விவகாரத்தில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பரோட்டா மாஸ்டர் மீது தமிழ்நாடு காவல் தடுப்பு சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் நடவடிக்கை.

    Advertisement

    சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷ் (23) என்பவர், இதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஏற்கெனவே இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த 22ம் தேதி இரவு, சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ், சிறுமியின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு தந்தை, தாய் மற்றும் 12 வயது சகோதரன் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தந்தை, மற்றும் சிறுமியின் 12 வயது சகோதரன் ஆகிய இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28.10.2026) இரவு தந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

    மேலும், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரான ஞானபிரகாஷ், சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மேலும் அவர் மீது தட்டார்மடம் காவல் நிலைய போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    English Summary

    Sathankulam: Near Sathankulam, a 'parotta master' has been booked under the Tamil Nadu Prevention of Dangerous Activities Act in connection with the murder of a minor girl's parents—a crime stemming from a love affair.