தூத்துக்குடி: தூத்துக்குடி முத்து நகரம் தொடர் கொலை காரணமாக குத்து நகரமாக மாறிவிட்டது எனவும், திமுக ஒரு கருமம், தவெக் ஒரு கொடிய கருமம் என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். மேலும் தவெக ஆட்சியில் வெற்றி பயணம் கிடையாது, வெற்றுப் பயணம், வெட்டிக் கொலை கிடையாது, வெற்றி கொலை எனவும் சாடியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அவதூறாக பேசியதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை வருகிறது. அதற்காக நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த்துப் பேசிய அவர்," தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது. ஒழுங்கு என்பது கிடையாது பாதுகாப்பு என்பது வெற்று ஒரு வார்த்தை. கலையரசன் கைது என்பது தமிழக வெற்றிக் கழகத்திரனால் மற்றவர்களைப் பற்றி எழுதியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். என்னையை பற்றி உருவக கேலி செய்கின்றார்கள் அதற்கு நடவடிக்கை இல்லை. திமுக ஒரு கருமம், தவெக ஒரு கொடிய கருமம். வெற்றி பயணம் கிடையாது. வெற்றுப் பயணம்.. வெட்டிக் கொலை கிடையாது.. வெற்றிகொலை அப்படி வைத்து விடலாமா? தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவில் பிடிபட்ட நிலையில் 4 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.. இது குறித்த கேள்விக்கு? கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றார்கள். அவர்களை ஏன் பிடிக்கவில்லை.. மீனவன் என்பதில் பிரச்சனை இல்லை. தமிழர் என்பதில் தான் பிரச்சனை இருக்கிறது. பல பேருக்கு பரம்பரை பகைவராக இருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு நடந்திருக்கிறது என்றால் கடந்த ஐந்தாண்டுடன் நிறுத்தக்கூடாது. அதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் யார்? முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.. ஏழரை கோடிக்கு மாணவர்களுக்கு கேக் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது வெற்று அறிவிப்பு., தண்ணீர் திறக்கும் போது அதை திறந்து விடுகிறார்கள். அது நுரையாக மாறுகிறது.. இதில், சோப்பு ஷாம்பு எங்கிருந்து வந்தது? இது ஒரு நச்சு., இதனை விலங்குகள் சாப்பிடுகிறது நாம் இதனை குளிக்கின்றோம். குடிக்கின்றோம். இதனை குடிக்கும் நாய், காட்டு விலங்கு, காட்டு யானை, சிங்கம், புலி கரடி எவ்வாறு வாழும்.. தூத்துக்குடி முத்து நகரம் தொடர் கொலை காரணமாக குத்து நகரமாக மாறிவிட்டது. சின்ன மூக்குத்திக்குள் பிட் கொண்டு செல்ல முடியும் என்று நீட் தேர்வுக்கு வரும் மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் கழட்டுகிறீர்களே? வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி மோசடி நடைபெறாமல் இருக்க முடியும் ஊழல் அதிகமாக உள்ள இந்தியாவிலும் நைஜீரியாவிலும் தான் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளது வேறு எந்த நாட்டிலும் கிடையாது. பெரும் பைத்திய கூட்டத்திற்கு மாட்டிகிட்டு நாடும் மக்களும் பெரும்பாடு படுகிறார்கள். அதை மாற்ற வேண்டும் பைத்தியத்துக்கு பைத்தியத்தை பார்த்தால் ஏன் வராது? ஆனால் வைத்தியரை பார்த்தால் தான் பயம் வரும். அதனால் எங்களை பார்த்து நாங்கள்தான் ஒரு இடம் கூட வரவில்லை. ஜீரோ கட்சி எப்ப பார்த்தாலும் எங்களை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பயம் இருக்கட்டும். தமிழகத்தில் நடப்பது அனைத்திற்கும் வெற்றிக்கொலை, வெற்றி திருட்டு, வெற்றுப் பயணம் எனப் பெயர் வைக்க வேண்டும்" என்றார்.சீமான்
காவல்துறைக்கு சம்பளம் தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்டும் வரி பணம் தான் போகிறதா?அதிகாலையிலேயே டார்ச்சர்.. காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா? நாதக சீமான் சீற்றம்!
தவெக
முறைகேடு
காவிரி ஆற்றில் தண்ணீர் நுரையாக வருகிறது. இது சோப்பு ஷாம்பு என்று அமைச்சர் கூறிய நிலையில் இது குறித்த கேள்விக்கு? சாயக் கழிவுகள் சேமித்து வைத்திருக்கிறார்கள்.வெற்று வாக்குறுதி
ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.. எடப்பாடி 2000., நான் வந்தால் 2500 ரூபாய் கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது கொடுக்க முடிகிறதா? வெற்று வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்தது குற்றம் தான்..சிரிப்பதா, அழுவதா? ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு சேம்பு பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? சீமான் கேள்வி
கொலை நகரம்
வெற்றி பயணம்