சீமானுக்கு ஆதரவாக மாறும் திமுக, அதிமுகவினர்?.. அம்பாசமுத்திரம் தேர்தல் குறித்து கார்த்திகா அதிரடி

  • தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிறது. அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. எதிரும் புதிருமாக இருந்தோர் இணக்கமாகி வருகிறார்கள். திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவெகவை விமர்சனம் செய்து வருகிறார்கள். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவருக்கு அதிமுக, திமுக ஆதரவு தெரிவிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சீமான் ரொம்ப நாட்களாக உழைத்துவிட்டார். அவருக்கு ஓட்டு போடுவோம் என திமுக, அதிமுகவினர் முடிவு செய்துள்ளதா நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடியில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் அந்தக் கட்சியின் மகளிரணி ஒருங்கிணைப்பாளரும், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டவருமான கார்த்திகா பேசினார். அப்போது அவர், "சீமான் அண்ணன் மட்டும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏவாக, சட்டமன்றத்திற்குள் நின்று கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். எதிரில் நின்று பதில் சொல்வதற்கான துப்பு, திராணி அவர்களுக்கு கிடையாது.

    Advertisement

    சீமானுக்கு திமுக அதிமுக ஆதரவு

    இப்போது இந்த மேடையில் நான் கேட்கும் கேள்வியை சட்டமன்றத்திற்குள் நின்று கேட்டால் எப்படி இருக்கும். இவர்களால் பதில் சொல்ல முடியுமா. அறநிலையத்துறை அமைச்சரால் பதில் சொல்ல முடியுமா. பொதுப்பணித்துறை அமைச்சரால் பதில் சொல்ல முடியுமா. யாரால் பதில் சொல்ல முடியும் யோசித்து பாருங்கள். அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டியிடுகிறாராமே என எல்லாரும் கேட்கிறார்கள். உங்களுக்கு மக்கள் ஓட்டு போடுவார்களா. வெல்ல முடியுமா.

    சீமான் ரொம்ப நாட்களாக உழைத்துவிட்டார். அவருக்கு ஓட்டு போடுவோம் என திமுக, அதிமுககாரங்க கட்சி கடந்து பேச ஆரம்பிவித்துவிட்டனர். அவர் சட்டமன்றத்திற்குள் போகட்டும். அவர் உழைப்புக்கான ஊதியத்தை கொடுப்போம் என சொல்லி திமுக, அதிமுகவினர் பேசி கொண்டிருக்கிறார்கள். பேசுகிறார்கள் நீங்கள் சென்று பாருங்கள். நான் திமுக காரன் தான். ஆனால் சீமானுக்கு தான் ஓட்டு போடுவேன் என ஒரு அண்ணன் சொல்கிறார்.

    Advertisement

    திரள்நிதி பெருமையே

    நான் அதிமுக. ஆனால் சீமான் உள்ளே போகட்டுமே. அவர் நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருக்கிறார் என இன்னொருவர் சொல்கிறார். 16 ஆண்டுகளாக என்னவெல்லாமோ குற்றச்சாட்டுகள் வைத்தனர். திரள்நிதி வாங்குவதை எல்லாம் கேவலமாக பேசுகிறார்கள். போதை பொருள் ஆசாமிகளிடம், லாட்டரி மாபியாவிடம் காசை வாங்கி கட்சி நடத்தி, ஆட்சியை பிடிப்பதே கேவலம். மக்களின் வேர்வையில் இருந்து திரள்நிதி பெருவது பெறுமை.

    ஜனம் மாறுது. கோமாளிகளுக்கே வாய்ப்பு கொடுத்துவிட்டோம். போராளிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா என்று ஜனம் நினைக்கிறது. நாம் தமிழர் கட்சி தோற்கலாம். எங்களின் வெற்றி, தோல்வியை விடுங்கள். மக்கள் எப்போது வெற்றி பெற போகிறார்கள். இப்போதும் மக்கள் போராட்ட களத்தில் உள்ளனர். மின்சார கட்டணம், சொத்து வரி, அரிசி உள்ளிட்ட விலை உச்சத்தில் உள்ளது. யார் இதற்கு பொறுப்பு. கொலை, கொள்ளை, போதை ஏதாவது குறைந்துள்ளதா. இது என்னங்க மாற்றம். இது ஏமாற்றம்" என்றார்.

    English Summary

    NTK leader Karthika claims that some DMK and AIADMK supporters are willing to vote for Seeman in the Ambasamudram by-election, citing his long years of public service.