திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்..பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

  • தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு திருச்செந்தூருக்கு நான்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். உலகப் புகழ்பெற்ற இக்கோவில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.

    Advertisement

    அந்த வகையில், நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் திருக்கல்யாணம் நடைபெறும் நவம்பர் 16ஆம் தேதி வரை கோவிலில் நடைமுறையில் உள்ள 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கந்த சஷ்டி விழாவிற்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 4 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பின் படி," வருகிற நவம்பர் 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:20 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06001), மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். மறுமார்க்கத்தில் இரவு 7:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06002), 8:50 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் சென்றடையும்.

    Advertisement

    மேலும் மற்றும் ஒரு சிறப்பு ரயில் (06004), இரவு 9:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11:30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06003), நள்ளிரவு 12:45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

    மேற்கண்ட ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லுார், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இச் சிறப்பு ரயில்கள் 10 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும்" என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    English Summary

    Southern Railway operates four special trains between Tirunelveli and Tiruchendur to help devotees attend the Kandha Sashti festival.