உருவகேலி யார் செஞ்சாலும் தப்பு! ஒரே ஒரு வார்த்தையால் ஒட்டுமொத்தமும் காலி! செளமியா அன்புமணி பளிச்!

  • தூத்துக்குடி: தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யாரையும் உருவ கேலி செய்யக் கூடாது எனவும், திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சில், எத்தனையோ நல்ல நல்ல நல்ல தகவல்கள் இருந்தது. கடைசியில் அவர் விட்ட ஒட்டுமொத்த பேச்சின் சாரம்சமும் மறைந்து போய் விட்டதாக பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி. தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்," மது இல்லாத தமிழகம் இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மது ஒழிப்பை மதுவிலக்கு கொள்கைகளை பெயரளவில் மட்டும் இல்லாமல் கொள்கை அளவில் கொண்டு வர வேண்டும். படிபடியாக மது கடைகள் மூடப்பட்டு, குடி நோயாளிகளாக மாறியுள்ள 54 லட்சம் தமிழர்களை எப்படி மீட்டுக் கொண்டு வர வேண்டும்.

    சௌமியா அன்புமணி

    வரப்போகிற தலைமுறை மூன்றாவது தலைமுறை குழந்தைகள் உள்ளனர். 1971 முதல் இரண்டு தலைமுறைகளாக நம்முடைய தமிழக மக்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். வரப்போகிற மூன்றாவது தலைமுறை காப்பாற்ற வேண்டும். மது இல்லாத தமிழகம் வளர வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கு அது தான் உத்திரவாதம். மது ஒழிப்பு போதை ஒழிப்பு இருந்தால் தான் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    Advertisement

    உருவகேலி

    இடைத்தேர்தல் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியை திறந்தால் பிரச்சாரங்கள் தான் காண்பித்து கொண்டிருக்கிறார்கள். யாரையும் நாம் உருவகேலி பண்ணக்கூடாது. எத்தனையோ நல்ல நல்ல நல்ல தகவல்கள் அவர் பேச்சில் இருந்தது. கடைசியில் அந்த வார்த்தையால் அந்த தகவல்கள் தெரியாமல் இந்த ஒரு வார்த்தை பேச்சுடைய சாரம்சத்தை சேர்த்து மாற்றிவிட்டது. உருவ கேலி என்பது கண்டிப்பாக யாராக இருந்தாலும் செய்யக்கூடாது.

    பாமக

    ஒரு தொலைக்காட்சி செய்தி பார்த்தோம். பாமகவின் ஒரு கொடி பெரிதாக பறந்தது. யார் வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களாகவே கொண்டு வந்தார்களா? அல்லது பாமக வேட்டி கட்டிக்கொண்டு வந்தார்களா என்பதை ஆய்வூ செய்ய வேண்டும். எந்த ஒரு விடுதியாக இருந்தாலும் உணவு போடும்போது இறைச்சி போடுவது என்றால் பிரச்சனைதான். அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஃப்ரீசர் இருக்க வேண்டும். பிரிட்ஜ் இருக்க வேண்டும். ஒரே ஒரு கெட்டுப்போன கறி கலந்தால், உடல்நல பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்படும்.

    Advertisement

    காய்கறி உணவு

    அதனால் இறைச்சிக்கு பதில் ரொம்ப பாதுகாப்பானது காய்கறி உணவு தான். எந்த இறைச்சியும் பாதுகாப்பாக சமைத்து போட முடிந்தால் பண்ணலாம். அது நடக்காத காரியம். பாதுகாப்பானது காய்கறி சாப்பாடு தான். தவெக ஆட்சி 100 நாட்களை நடந்துள்ளது. 3 மாதங்கள் முதல் கட்டமாக 717 மதுக்கடைகளை மூடியதை வரவேற்கிறோம். சிங்கப்பெண் படை போன்ற பெண்கள் பாதுகாப்பிற்காக அதை வரவேற்கிறோம். லஞ்சம் ஊழல் ஒழிப்புக்காக முன்னெடுப்பை எடுத்துள்ளார்கள். அதை நாம் அதை கண்கூடாக பார்க்கிறோம். அதை வரவேற்கிறோம்" என்றார்.

    English Summary

    Sowmiya Anbumani says body shaming is wrong and claims one remark overshadowed the positive points in Stalin’s campaign speech.