திடீரென மூடப்பட்ட ஆங்கிலேயர் கால ஜெயில்.. இரவோடு இரவாக மாற்றப்பட்ட கைதிகள்! சிறைத்துறை அதிரடி!

  • தூத்துக்குடி: தேனி சிறையில் கைதிகள் தப்பியோடியதன் எதிரொலியாக, தமிழக சிறைத்துறையின் அதிரடி உத்தரவால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வந்த கிளைச்சிறை திடீரென மூடப்பட்டுள்ளது. அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அனைவரும் இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து 17 சிறை கைதிகள் நேற்று முன்தினம் தப்பி ஓடிய நிலையில் அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    Advertisement

    கடந்த புதன்கிழமை முதல் நேற்று வியாழன் வரை தப்பி ஓடிய சிறை கைதிகள் 17 பேரையும் போலீசார் கைது செய்து கானாவிளக்கு காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிடிப்பட்ட சிறை கைதிகளில் ஐந்து பேர் தேக்கம்பட்டி சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

    இதனை அடுத்து சிறை கைதிகளை நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் தேக்கம்பட்டி சிலையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேனி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் பொறுப்பை கவனித்த நாகேஸ்வரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கிடையே சிறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் எவ்வித தெய்வம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் சிறைத்துறை அலுவலர்களுக்கு அதிரடி எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். இந்நிலையில், தமிழக சிறைத்துறையின் அதிரடி உத்தரவால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வந்த கிளைச்சிறை திடீரென மூடப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழக சிறைத்துறைக்கு சொந்தமான கிளைச்சிறை அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதலே செயல்பட்டு வரும் இந்த சிறையில், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டு வந்தனர். இங்கு 25-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    Advertisement

    இந்நிலையில், தேனியில் உள்ள கிளைச்சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 கைதிகள் சிறைப்பணியாளர்களை தாக்கிவிட்டு இரவு நேரத்தில் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சிறைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கிலும், சிறைப்பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் தமிழக சிறைத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அனைவரும் இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். தற்போது கிளைச்சிறை பூட்டப்பட்டு பயன்பாடின்றி காணப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu Prisons Department closes Srivaikuntam sub jail after the Theni escape incident, shifting all inmates under police escort to Perurani district prison.