தமிழக அரசுக்கு பயமில்லை.. பாஜக எதிர்ப்பில் திமுக உறுதியாக இருக்க வேண்டும்.. வன்னி அரசு

  • தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்றுள்ளது. விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு அமைச்சராகியுள்ளார். பாஜகவை கண்டு தமிழக அரசு பயப்படவில்லை. பாஜக எதிர்ப்பு அரசியலில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று வன்னி அரசு கூறியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடியில் அமைச்சர் வன்னிஅரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவை கட்டுக்கோப்பாக, அந்த கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை கட்டுப்படுத்துவது தான் சாதகமாக இருக்க வேண்டும். அந்த சாதனையை அதிமுக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நிகழ கூடாது. காவல்துறை சித்தரவதைக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது

    Advertisement

    பாஜக எதிர்ப்பு அரசியல்

    பாஜக எதிர்ப்பணியில் தவெக, திமுக உள்ளிட்ட அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும். பாஜக எதிர்ப்பில் இந்தியா முழுவதும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும் என்பது எங்களின் தலைவரின் விருப்பம். இதை அவர் நீண்ட காலமாக கூறி வருகிறார். கடந்த காலங்களில் கூட திமுகவுடன் இணைந்ததற்கு பாஜக எதிர்ப்புப் புள்ளி அரசியல் தான் காரணம். இப்போத பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக தவெகவுடன் இணைந்து செயல்படுகிறோம்.

    தவெக மற்றும் திமுக இந்தியா கூட்டணியில் வரவேண்டும் என்பது அந்தத் தொலைநோக்கு பார்வையில் சொல்லப்பட்டது. இன்றைக்கும் நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மக்களுக்கு எதிரான ஆட்சியை, மாணவர்களுக்கு எதிரான ஆட்சியை மோடி அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும், அப்பறப்படுத்த வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.

    Advertisement

    தவெக பயப்படவில்லை

    மாணவர்கள் போராட்டம் வெல்லும். அதைநோக்கி பாஜக எதிர்ப்புப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக பாஜகவும் கூட்டணி இணைவார்களா என்பது எனக்கு தெரியாது. பாஜக எதிர்ப்பில் திமுக உறுதியாக தான் உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியும். இது கற்பனையாக திமுகவுக்கு எதிராக பரவும் அவதூறு. திமுகவில் இருக்கும் ஒரு சிலருக்கு அதில் விருப்பம் இருக்கலாம்.

    நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியுடன் இணைந்துதான் திமுக செயல்படுகிறது. பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும், அக்கட்சி இந்த தேசத்துக்கு எதிராக செயல்பட வேண்டும். அந்த வகையில் திமுகவும் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பாஜகவை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. நீட் தேர்வு எதிர்ப்பில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது" என்றார்.

    English Summary

    Minister Vanni Arasu said the Tamil Nadu government is not afraid of the BJP and urged the DMK to remain steadfast in its anti BJP political stand.