தூத்துக்குடி: கூடுதல் விலை கிடையாது எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்கிறோம் என கூவி, கூவி கோவில்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்து வருகின்றனர் ஊழியர்கள். மேலும், நாங்கள் பிச்சை எடுத்தது போதும், தற்போது எங்களை தவெக அரசு பிச்சை எடுக்கவிடவில்லை - எங்களுக்கு இப்போது பயமில்லை நிம்மதியாக தூங்குகிறோம் என்றும் சொல்லியுள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு, 10,000 ரூபாய் ஊதிய உயர்வு, கடைகளில் துாய்மை பணி மேற்கொள்ள, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இனி, ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவர் என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், சமீபத்தில் அறிவித்தார்.
இருப்பினும், பல கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக, மது பிரியர்கள் புகார் தெரிவித்த நிலையில், தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்து, டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லெட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் செயல்படக்கூடிய டாஸ்மாக் கடையில் கூடுதல் MRP விலை கிடையாது... அனைத்து மதுபானங்களும் MRP விலை மற்றும் BUY BACK (பாட்டில் திரும்ப பெறுதல்) விலை ரூ. 10 மட்டும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. புகார்கள் தெரிவிக்கக்கூடிய whatsapp எண்ணுடன் குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மதுபானம் வாங்க வருபவர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கவில்லை, இனி பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை, MRP விலைக்கே விற்பனை செய்கிறோம் என்று கூறுவதுடன், சிலர் கூடுதலாக பணம் கொடுத்தாலும் அதை திருப்பிக் கொடுத்து விடுகின்றனர். இதுவரை பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கி வந்த நிலையில் தற்போதுMRP விலை கொடுத்தால் போதும் என்று ஊழியர்கள் சொல்லி சொல்லி மது விற்பனை செய்து வருவது மதிப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு பாட்டிலுக்கு அஞ்சு ரூபாய் கூடுதலாக பணம் கேட்பார்கள், தற்போது கேட்பதில்லை, மேலும் பாட்டிலை திருப்பிக் கொடுத்ததும் அதற்கான பணத்தையும் சரியாக கொடுத்து விடுவதாகவும், முன்பு கூடுதலாக பணம் கொடுக்கும் போது கொஞ்சம் மன வருத்தம் இருந்தது. தற்போது அது இல்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக மதுபிரியர்கள் கூறுகின்றனர். டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர்கள் கூறுகையில், அரசு தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர், தூய்மை பணிகளுக்கு எங்களது கையில் இருந்து பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம். தற்போது துாய்மை பணி மேற்கொள்ள, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளது வரவேற்கக்கூடியது. தற்போது கூடுதல் விலைக்கு நாங்கள் மது விற்கவில்லை. தற்போது எம்.ஆர்.பி விலைக்குத் தான் விற்க்கிறோம். அதை சொல்லி சொல்லி விற்கிறோம். மதுப் பிரியர்கள் கூடுதலாக பணம் கொடுத்தாலும் இதுவரை நாங்கள் பிச்சை எடுத்தது போதும், எங்களை அரசு பிச்சை எடுக்கவிடவில்லை என்று கூடுதல் பணம் வேண்டாம் என்று கூறிவருகிறோம். தற்போது எவ்வித பயமும் இல்லை, நிம்மதியாக தூங்கினேன், கூடுதல் பணம் வாங்கிய போது எங்களையும் எங்களது குடும்பத்தையும் திட்டுவார்கள். தற்போது பிச்சை எடுக்க வேண்டிய நிலையை தடுத்து விட்டார்கள். தமிழக முதல்வருக்கும், எங்கள் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கு லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.டாஸ்மாக் ஊழியர்கள்
கூடுதல் விலை
எம்ஆர்பி விலை
டாஸ்மாக்
சிஎம் விஜய்