அதிமுக திமுக தவெக அனைத்து ஆட்சியிலும் தப்பித்த அதிகாரிகள்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு கேஸ் ஷாக்

  • தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியது. 50 வருட திராட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக, திமுக போல தவெகவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை என்று கைகழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அதிமுக ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது. போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக மீதும், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அழியாத கறையாக படிந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    Advertisement

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

    17 போலீசார், மாவட்ட ஆட்சியர், 3 வருவாய் அலுவலர்கள் குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷன் பரிந்துரை செய்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரித்து. அதிமுக ஆட்சி மாறி, திமுக ஆட்சி வந்தது. இப்போது தவெக ஆட்சியும் வந்துவிட்டது. காட்சிகள் மாறவில்லை.

    துப்பாக்கிச்சூடுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்ட காவல் அதிகாரி சைலேஷ்குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு வட்டாட்சியர் பதவி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து ஏமாற்றமளித்தனர். திமுக, அதிமுக தான் இப்படி என்றால் தவெகவுக்கும் விதிவிலக்கில்லை.

    Advertisement

    அதிமுக திமுக தவெக

    "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் நியமித்த அருணா ஜெகதீசன் அறிக்கையை நிறைவேற்றவில்லை. அதிகாரிகளை பாதுகாத்தனர். உயிரிழந்த மக்களுக்கு யார் பதில்" என்று சட்டமன்றத்தில் திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.

    அதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "அருணா ஜெகதீசன் ரிப்போர்ட் இப்போது உங்கள் கையில் உள்ளது. நீங்கள் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள். அரசுக்கு தைரியம் இருந்தால், நாங்கள் எடுக்காத நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்" என்று சவால்விட்டார். அரசியல் காரணங்களுக்காக மூன்று கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க எந்த கட்சியும் துணை நிற்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

    Advertisement

    தமிழக அரசு அதிர்ச்சி

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழக அரசு தரப்பில், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சிபிஐ கூறியதால் நடவடிக்கை கைவிடப்பட்டது. அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது சட்டரீதியாக கடமை இல்லை என்றும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Thoothukudi Firing incident TVK Follows ADMK DMK root to save officials. Tamilnadu governments replie in Highcourt gave shock.