தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல்

  • தூத்துக்குடி: தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று உறுதிபடுத்திய நீதிமன்றம், இரட்டைத் தூக்கு தண்டனையும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு நல்ல தீர்ப்பு, சரியான தீர்ப்பு, அதே போல் கோவையில் நடந்த அந்த சிறுமி கொலை வழக்கிலும் இதே போன்று தீர்ப்பு வேண்டும் என பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்ற நிலையில் காணாமல் போனார்.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.. இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தினர்.

    தூத்துக்குடி மாணவி

    இதைத் தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி, ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி தர்ம முனீஸ்வரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தர்ம முனிஸ்வரன் மீது தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    தர்ம முனீஸ்வரன்

    தொடர்ந்து 3 முறை நேரில் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், 73 சாட்சிகளிடம் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அனைத்தும் கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை நிறைவடைந்தது. தொடர்ந்து, இவ்வழக்கில் இன்று 25ம் தேதி திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

    இரட்டை தூக்கு

    பி.என்.எஸ் சட்டம் 124 ஒரு தூக்கு தண்டனையும், மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 6 இன் கீழ் ஒரு தூக்கு தண்டனை என இரண்டு தூக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றார். சம்பவம் நடந்து 77 நாளில் குற்றவாளிக்கு இரண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்..

    Advertisement

    மாணவியின் தந்தை

    இது குறித்து மாணவியின் தந்தை கூறும் போது., தீர்ப்பு நல்ல தீர்ப்பு, சரியான தீர்ப்பு, அதே போல் கோவையில் நடந்த அந்த சிறுமி கொலை வழக்கிலும் இதே போன்று தீர்ப்பு வேண்டும். இதே போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது" என்றார்.

    77 நாட்களில் தீர்ப்பு

    சிறுமியின் வழக்கறிஞர் தாஸ் கூறும் போது," சம்பவம் நடந்து 77 நாட்களில் இரட்டை தூக்கு தண்டனை கொடுத்து இருக்கின்றார்கள். மாவட்ட எஸ்பி மதன் முழு வேகத்தில் இந்த வழக்கை முடித்து இருக்கின்றார். கிராம மக்கள் நல்ல ஆதரவு கொடுத்துள்ளார்கள். பெண் குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் பெண் குழந்தையுடன் பிறந்த சகோதரர்களுக்குண்டான வெற்றி. கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கிலும் இதே போன்று தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    Advertisement

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

    மேலும், அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் கூறும் போது, 77 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு துக்கு தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

    English Summary

    Thoothukudi court awards double death sentence in student assault-murder case; victim’s family seeks same verdict in Coimbatore case.