தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகிக்கு இரவில் வந்த போன்.. ஒரே ஆபாச படங்கள்! எஸ்பி ஆபீஸில் செம ட்விஸ்ட்

  • தூத்துக்குடி: தமிழக அரசியல் களத்தில், தவெக அரசின் அறிவிப்புகளும், அதைத் தொடர்ந்து வெளியாகும் பரபரப்பு செய்திகளும் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்று வருகின்றன. ஆனால், அதே வேகத்தில் அந்த கட்சியின் மாவட்ட மற்றும் நகர அளவிலான நிர்வாகிகள் மீதான சர்ச்சைகளும், பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன... இதோ இப்போதும் ஒரு பரபரப்பு சம்பவம் தூத்துக்குடி தவெகவில் நடந்துள்ளது...!!

    Advertisement

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பவ்யலட்சுமி என்ற பெண், தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது கடுமையான பாலியல் புகாரை சுமத்தினார்.

    Advertisement

    ராணிப்பேட்டை பாலியல் புகார்

    கட்சியில் உயரிய பதவி வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, சுமார் 10 மாதங்களாக தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், மாதவிடாய் என்று சொன்னபோதும், தன்னை டார்ச்சர் செய்ததாகவும், ரகசியமாக ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

    சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீசார், விஜய் மோகன் மற்றும் ராணிப்பேட்டை செய்தியாளர் ஜான் பிரிட்டோ ஆகிய 2 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Advertisement

    இந்த பரபரப்பான சம்பவம் அடங்குவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் அதையும் விட அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்னொரு பாலியல் புகார் வெடித்துக் கிளம்பியுள்ளது.

    தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு தந்துள்ளார்.. தான் சந்தித்த கொடுமைகள் குறித்து அந்த பெண் நிர்வாகி தனது புகார் மனுவில் நேரடியாக கூறியிருப்பதாவது:

    "சட்டமன்ற தேர்தல் பணியில் நான் இணைந்து பணியாற்றினேன். அப்போது ஆறுமுகநேரி நகர தவெக செயலாளர் நிவாஸ் கண்ணன் கட்சியில் பெரிய பதவி வாங்கி தருவதாக கூறி செல்போனில் இரட்டை அர்த்த ஆபாச வார்த்தைகளால் பேசினார். பெரிய பொறுப்பு வேண்டுமானால் சில பொறுப்பாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்றார்.

    Advertisement

    வாட்ஸ்அப்பில் ஆபாச படங்கள்

    இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டரிடம் நான் புகார் தெரிவித்தேன். ஆனால், மணப்பாட்டை சேர்ந்த தவெக பிரமுகர் ரூஸ்வெல்ட் என்னை தொடர்பு கொண்டு "நாங்கள் கூப்பிடும் இடத்திற்கு வந்து எங்களை சந்தோஷப்படுத்தினால் மட்டுமே கட்சியில் பெரிய பொறுப்பு தருவோம்" என்றார்.

    மேலும் வாட்ஸ்அப் வீடியோ காலில் வரும்படியும், நைட் நேரங்களில் அழைத்தும் தொந்தரவு செய்தனர். வாட்ஸ்அப்பில் ஆபாசமான படங்களை அனுப்பி கடுமையான டார்ச்சர் கொடுத்தனர்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான் "முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் புகார் கூறுவேன் என்றேன்.. அதற்கு அவர்களுக்கு ஆதரவாக பிளஸ்சி, மணப்பாடு அமலன், திருச்செந்தூர் ஆட்டோ குட்டி ஆகியோர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு "நிர்வாகிகளிடம் பிரச்சனை செய்யாமல் ஒதுங்கி விடு, இல்லாவிட்டால் நடப்பதே வேறு" என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

    Advertisement

    எஸ்பி ஆபீசில் புகார்

    இதனிடையே கடந்த 26.6.2026 அன்று இரவு ரூஸ்வெல்ட் மற்றும் பிரைட்டர் ஆகியோர் கூலிப்படையை ஏவி விட்டு எனது செல்போனை பறித்து சென்றுவிட்டார்கள்.. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் கொடுத்தும், அமைச்சர் ஸ்ரீநாத்திடம் சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இப்போது எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.. இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பறித்து செல்லப்பட்ட எனது செல்போனை காவல் துறை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். அதில்தான் எனக்கு அவர்கள் ஆபாசமாக கொடுத்த செக்ஸ் டார்ச்சர் தொடர்பான அனைத்து ஆதாரங்களும், பதிவுகளும் உள்ளன.

    Advertisement

    உண்மைத்தன்மை என்ன

    அதனால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது செல்போனையும் மீட்டுத் தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    ராணிப்பேட்டை சம்பவத்தின் சூடு தணிவதற்குள், தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொந்தரவு, ஆபாச டார்ச்சர் மற்றும் கூலிப்படை மிரட்டல் புகார் அளித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.... ஆனால் இதில் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை.. போலீசார்தான் நிஜத்தை வெளிக்கொணர வேண்டும்...!!

    English Summary

    Thoothukudi TVK Woman Leader Gets Late-Night Call.. Obscene Photos on WhatsApp, SP Office Twist