தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் இருந்து பணம், செல்போனையும் அந்த கும்பல் பறித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அளித்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக 3 பேர் கைது.

    ஒரு பெண் கடந்த 24 ஆம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது சமூகத்தைச் சேர்ந்த பரிச்சயமான நபரான பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் அவரது இரு நண்பர்களுடன் சேர்ந்து தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை அழைத்துச் சென்று மீன்பிடி துறைமுகம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

    மேலும் தன்னிடம் இருந்த ரூ.2500 ரொக்கம், ஒரு கைப்பேசி, இரு வெள்ளி மோதிரங்கள் ஆகியவற்றை அந்த 3 பேரும் பறித்துச் சென்றதாகவும் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 49/2026 என பதிவு செய்யப்பட்டு பாரதிய நியாயச் சட்டம் (பிஎன்எஸ்) பிரிவுகள் 296 (b), 126(2), 115 (2), 309 (4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு சுனில் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட அந்தோணிராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லி (21) ஆகிய 3 பேரும் சில நேரங்களிலேயே கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    Police in Thoothukudi have arrested three men for allegedly gang-raping a young woman near the district’s fishing harbour, triggering shock and outrage across the region.